Is your company interested in engaging in CSR activities or projects with us? Please click here to complete the form.
At Indira Charitable Trust, we are committed to collaborating with corporate entities to uplift the underprivileged through education and life enhancement initiatives.
As per the mandate set forth by the Ministry of Corporate Affairs effective from April 1, 2021, all NGOs seeking CSR funding are required to register. Therefore, we have duly registered Indira Charitable Trust with the Ministry of Corporate Affairs.
Website | : | www.aspiresys.com |
Date | : | 10-12-2023 |
Aspire System CSR Aspire Systems குழுவினர் நமது இந்திரா அறக்கட்டளையுடன் இணைந்து 10-டிசம்பர்-2023 சரியாக மதியம் சுமார் 1 மணி அளவில், "மிக்ஜம் சூறாவளி/மழையால்" மிகவும் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில்லுள்ள மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒலை குடிசை பகுதியான அம்பேத்கர் காலனி மற்றும் இந்திரா நகர் காரணையில் வசிக்கும் 300 இருளர் இன பழங்குடி மக்களான 70 குடும்பத்தினரீன் ஒரு மாததிற்கு தேவையான சுமார் ஒரு இலட்ச மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களான "5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அனைத்து சமையல் பொருட்களுடன்,அவர்களின் 100 குழந்தைகளுக்கும் தேவையான ஹெல்த் மிக்ஸ் பவுடர், பிஸ்கட், சாக்லேட், பிரட் மற்றும் ஒருசில நொறுக்கு தீனி பொருட்களுடன்" நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை கூறியும், மற்றும் கல்வியை கைவிட்டுவிடக்கூடாது என்ற மிக வலிமையான விதைகளை விதைத்து விட்டு வந்தோம்.
Website | : | www.enoahisolution.com |
Date | : | 28-12-2021 |
Activities | : | Issued 1 month provision items to 32 downtrodden irular families along with sandals. |
Thanks to eNoah iSolution India Pvt Ltd for putting your hands with us for downtrodden people. special thanks to a CSR Team & HR.Mr. Sunil |
வட சென்னை எண்ணூர், அடுத்த காமராஜர் துறைமுகம் அருகாமையிலுல்ல காட்டுப்பள்ளில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்கள் சுமார் 100 பேருக்கும் மேல் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஆற்று கழிவு நீரில் மீன், இறால் மற்றும் நண்டு பிடித்து தற்காலிக தார்பாலின் கூடாரம் அமைத்து தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்கள், இவர்களுக்கு அரசு சார்ந்த எந்த ஒருவித அடையாள அட்டைகளான ஆதார், வாக்காளர், ரேஷன் மற்றும் ஜாதி சான்றிதழ் உட்பட்ட எந்த ஒரு சான்றும் கிடையாது என்றும் தெரிவித்து இருந்தார்கள்.
அடையாள அட்டை இல்லாததால் தேர்தலில் இவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை மற்றும் கொரோனா நோய் தொற்று பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் கிடையாது. கொரோன நிமித்தம் அப்பகுதியில் வசிக்கும் சிறு பிள்ளைகள் இரண்டு ஆண்டு காலமாக பள்ளிக்குச் செல்லவில்லை என்பதால் இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகதான் இருக்கிறது. இந்நிலையில் இந்திரா அறக்கட்டளை (http://www.indiracharitabletrust.com/) R. ரூபன் பொன்ராஜ் உடன் தகவல் தொழில் நுட்ப கம்பெனி (eNoah iSolution India Pvt Ltd) இ-நோவா ஐசொல்யூஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (https://enoahisolution.com/) இணைந்து சிஎஸ்ஆர் (Corporate Social Responsibility) சேவையாக ஒரு மாதத்திற்கு தேவையான 31 மளிகை பொருட்களுடன் காலணிகளும் ஓவ்வொரு குடும்பத்திற்க்கும் வழங்கபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அவர்களின் அடிப்படை தேவைகளான ஆதார்,ரேஷன், வாக்காளர், சாதி சான்றிதழ் மற்றும் கல்வி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இரா .பு.அன்புச்செழியன், மற்றும் அறக்கட்டளை ஆர்வலர்கள் உமா சங்கர்,பால் சுரேஷ், சித்தார்த், தளபதிராஜா, விக்னேஷ் போன்றோர் பங்கு பெற்று சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழக முதல்வர் ஐயா தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பழங்குடி இருளர் சமூகமான தங்களுடைய வாழ்வாதாரத்தையும், அத்தியாவசிய தேவைகளையும், குழந்தைகளின் படிப்பையும் பூர்த்தி செய்து உதவுமாறு கண்ணீர் மல்க கேட்டு கொண்டனர்.
Thanks Khadims! as part of CSR activities, for hired a poor/downtrodden young people via our channel. புகழ்பெற்ற காலணி விற்பனைச் சங்கிலியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற காலணி விற்பனைச் சில்லறை வணிகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளை கிராமப்புற இளைஞர்கள் உட்பட விளிம்புநிலை மக்களுக்கு விரிவுபடுத்த விரும்புகிறோம், அத்தகைய இளைஞர்களிடம் அவர்களின் வாழ்வாதாரத்தில் வடிவத்தை கொண்டு வரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், எனவே ‘இந்திரா அறக்கட்டளையுடன்’ இணைந்து செயல்பட விரும்புகிறோம்.
வேலை பொறுப்புகள்: சரியான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கும் வாடிக்கையாளர் உறவைப் பேணுவதற்கும். வாடிக்கையாளர் குறைகள் மற்றும் புகார்களைக் கையாளுதல். பங்குகளை நிரப்புதல் மற்றும் சரியான சரக்கு மேலாண்மை ஆகியவற்றைக் கையாளுதல். எங்கள் விதிமுறைகளின்படி தரை பராமரித்தல். விற்பனை இலக்கை அடைவதில் செயலில் பங்கு கொள்ளுதல்.
சம்பளம் & நன்மைகள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு:- கையில் சம்பளம் மாதம் ரூ.11,500/- + ஊக்கத்தொகை சுய மருத்துவக் காப்பீடு வாராந்திர விடுமுறை ஒரு வருடத்தில் 32 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறைகள் PF + ESIC + போனஸ்
சம்பளம் & நன்மைகள் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு:- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இடம்பெயர்ந்த விண்ணப்பதாரர்களுக்குப் பகிரப்பட்ட தங்குமிடம் வழங்கப்படும் கையில் சம்பளம் மாதம் ரூ.9500/- + ஊக்கத்தொகை சுய மருத்துவக் காப்பீடு வாராந்திர விடுமுறை ஒரு வருடத்தில் 32 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறைகள் PF + ESIC + போனஸ் (வேட்பாளர் நிறுவன தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், அவருக்கு NTH INR 11500 மட்டுமே வழங்கப்படும்)
பதவி: வாடிக்கையாளர் பராமரிப்பு அசோசியேட் (CCA)
வயது: 18 - 28 வயது [ஆண்களுக்கு முன்னுரிமை]
தகுதி: 10 ஆம் வகுப்பு
ஊதியம்: மூன்றாம் தரப்பு ஊதியம்
காலியிட இடம் சென்னை: 44
1965 இல் நிறுவப்பட்ட புகழ்பெற்ற காலணி விற்பனை சங்கிலி, இது இந்தியாவின் 2வது பெரிய காலணி விற்பனை நிறுவனமாகும். 1993 ஆம் ஆண்டு முதல் சில்லறை விற்பனை நிலையத்தைத் திறந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 850க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மற்றும் புது தில்லி மற்றும் சென்னையில் பிராந்திய அலுவலகம்.
இந்திரா அறக்கட்டளை ஒரு புகழ்பெற்ற காலணி விற்பனை சங்கிலி நிறுவனத்தையும் வேலை தேடுபவர்களையும் இணைக்கிறது. எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் எந்த ஆட்சேர்ப்பு செயல்முறையிலும் ஈடுபடவில்லை. நிறுவனம் மற்றும் வேட்பாளர்களுக்கு நாங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம்.