"The purpose of sharing these pictures is to raise awareness and encourage you to engage in charitable activities in your local community. We kindly request that our pictures not be used for any promotional purposes. Thank you for your understanding."
வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை நாம் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். இருக்கும் வரை மனித நேயத்துடன் வாழ்வோமே. அது ஒரு அழகிய குடும்பம், கணவன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சந்தோஷமான வாழ்க்கை, எதிர்பாராதவிதமாக கணவன் இறந்துவிட, இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த நினைவுகளில் இருந்து வெளிவர இயலாமல், வாடகை வீட்டில் தன்னுடைய இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் 30 வயதே நிரம்பிய அப்பெண்மணி மற்றும் குழந்தையை சந்தித்தோம். எப்பாடுபட்டாவது உழைத்து அவர்களை படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு எடுத்துக் கொண்டுவர வேண்டும் என்ற நம்பிக்கையை மேலும் மெருகேற்றும்விதமாக, இந்திரா அறக்கட்டளை சார்பாக அப்பெண்குழந்தையின் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கான காசோலையை வழங்கி, மேலும் நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்து விட்டு வந்தோம். இந்நிகழ்வில் என்னுடன் நமது இந்திரா அறக்கட்டளை திரு தியாகராஜ் Ex-Army&Rtd.SBI அவர்கள். நன்றி
தமிழக அரசின் கல்வித் துறையை சார்ந்த அதிகாரி திரு.பாலு SSA.APO அவர்கள் மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒட்டு/ஒலை குடிசை பகுதியான இந்திரா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளை சந்தித்து, அப்பகுதியில் 20/10/2024 அன்று ஆய்வு மேற்கொண்டு பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளின் காரணம் கண்டறிந்து, தொடர்ந்து விடுப்பு எடுக்கும் குழந்தைகளை கண்டறிந்து, மேலும் சரியாக பள்ளி செல்லும் குழந்தைகளை ஊக்குவிக்கும் வண்ணமாகவும் "இல்லம் தேடி கல்வி" Anbil Mahesh Poyyamozhi என்ற திட்டத்தின் மூலம் அம்மக்கள் வசிக்கும் இடத்திலே "கல்வி மையம்" அமைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தார், மேலும் அம்மக்களின் நலன் கருதி பேருந்து வசதிக்காக இந்திரா அறக்கட்டளையின் முன்னெடுப்பை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்வில் நமது அறக்கட்டளை மூத்த ஆலோசனை உறுப்பினர் திரு.அன்பு செழியன், திரு தியாகராஜ் Ex-Army&Rtd.SBI, திரு சரவணன், மற்றும் இவர்கள் அனைவரோடும் நானும் கலந்துகொண்டேன் நன்றி
அரக்கோணத்தை அடுத்து சோளிங்கர் பகுதியில் கடுமையாக உழைத்து வாழும் பழங்குடி மக்களை சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் தான் சந்திக்க முடியுமென என்கின்ற காரணத்தால் அப்பழங்குடி மக்களை, ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனம் நமது இந்திரா அறக்கட்டளையோடு இணைந்து 19/10/2024 அன்று மாலை 6:30 மணிக்கு சந்தித்து கல்வியை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது என்ற விதைகளை விதைத்து பள்ளி செல்லும் மாணவ மாணவியர்க்கு பள்ளிக்கூடம் செல்லும் பை, பென்சில் பாக்ஸ், 2 பென்சில், 1 பேனா, ஏறேசர், சார்பெனர் ஆகியவை அடங்கிய ரூபாய் 1250 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்திரா அறக்கட்டளை மூத்த ஆலோசனை உறுப்பினர் .திரு அன்பு செழியன், திரு தியாகராஜ் Ex-Army&Rtd.SBI, திரு சரவணன், திரு லோகேஷ், திரு சாலமன் மற்றும் இவர்கள் அனைவரோடும் நானும் கலந்துகொண்டேன், நன்றி குறிப்பு: இப்பழங்குடி மக்கள் குழந்தைகளின் கல்விக்காக இலவசமாக tuition எடுத்தும் மேலும் குழந்தைகள் கல்வியை கைவிட்டுவிடக்காதது என்று அவர்களுக்காக எப்பொழுதுமே பாடுபட்டு வரும் சகோதரி திருமதி.கௌதமி அவர்களுக்கும் எங்களுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
ஆதிவாசிகள் காலனி, தண்ணீர் குளம், திருவள்ளுவர் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளை, ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனம் நமது இந்திரா அறக்கட்டளையோடு இணைந்து 11/10/2024 அன்று 1 மணிக்கு சந்தித்து 1) குழந்தை திருமணம், 2) குழந்தை துஷ்பிரயோகம், 3) பெண்கள் அதிகாரமளித்தல், 4) ஆல்கஹால், 5) கடன் பிரச்சினைகள் மற்றும் நிதி கல்வியறிவு குறித்த விழிப்புணர்வுடன் பள்ளிக்கூடம் செல்லும் பை, பென்சில் பாக்ஸ், 2 பென்சில், 1 பேனா, ஏறேசர், சார்பெனர் ஆகியவை அடங்கிய ரூபாய் 1250 மதிப்புள்ள உபகரணங்கள் 40 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜெய் பீம் பழங்குடியினர் புதுவாழ்வு சங்க மாநில தலைவர் திருமதி.கீதா, பழங்குடி மக்களுக்காக சேவை செய்யும் ஓய்வு பெற்ற BDO, ஓய்வு பெற்ற கல்பாக்க அதிகாரி மற்றும் இந்திரா அறக்கட்டளை திரு.தியாகராஜ் Ex.Army & Rtd.SBI, திருமதி.மனோகர் அவர்களோடு நானும் கலந்துகொண்டு கல்வியை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது என்ற விதையை விதைத்து வந்தோம் நன்றி.
மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒட்டு/ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர், காரணை, கோடுவெளி பஞ்சாயத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் இருளர் இன பழங்குடி மக்கள் மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளை, தமிழக அரசு குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனம் நமது இந்திரா அறக்கட்டளையோடு இணைந்து 29/9/2024 அன்று மாலை 2 மணிக்கு சந்தித்து, குழந்தைகள் நலத்துறை சார்பாக ஆலோசனை அமர்வு மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்க்கு பள்ளிக்கூடம் செல்லும் பை, பென்சில் பாக்ஸ், 2 பென்சில், 1 பேனா, ஏறேசர், சார்பெனர் ஆகியவை அடங்கிய ரூபாய் 1250 மதிப்புள்ள உபகரணங்கள் 39 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் திரு.மதுசூதனன் CSR Team, பழங்குடி மக்களுக்காக சேவை செய்யும் திரு.சரவணன் மற்றும் நமது அறக்கட்டளை திரு.தியாகராஜ் Ex.Army & Rtd.SBI, திரு.மனோகர், Rtd.Cent.Govt. திருமதி.மனோகர் அவர்களோடு நானும் கலந்துகொண்டு கல்வியை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது என்ற விதையை விதைத்து வந்தோம் நன்றி.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரத்துர் கிராம குளக்கரை அருகில் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சட்டமங்கலம் கிராம குளக்கரை அருகில் வசிக்கும் இருளர் இன பழங்குடி மக்கள் மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளை, ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனம் நமது இந்திரா அறக்கட்டளையோடு இணைந்து 28/09/2024 சந்தித்து, மாணவ மாணவியர்க்கும் பள்ளிக்கூடம் செல்லும் பை, பென்சில் பாக்ஸ், 2 பென்சில், 1 பேனா, ஏறேசர், சார்பெனர் ஆகியவை அடங்கிய ரூபாய் 1250 மதிப்புள்ள உபகரணங்கள் 46 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நமது அறக்கட்டளை திரு.தியாகராஜ் Ex.Army & Rtd.SBI, வழக்கறிஞர் திரு.சிம்சன் மற்றும் அவரது நண்பர்களோடு நானும் கலந்துகொண்டு கல்வியை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது என்ற விதையை விதைத்து வந்தோம் நன்றி.
ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனமானது இந்திரா அறக்கட்டளையோடு இணைந்து, ஞாயிற்றுகிழமை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள DEC 3 இயக்க அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்க்கும் பள்ளிக்கூடம் செல்லும் பை, பென்சில் பாக்ஸ், 2 பென்சில், 1 பேனா, ஏறேசர், சார்பெனர் ஆகியவை அடங்கிய ரூபாய் 1250 மதிப்புள்ள உபகரணங்கள் 58 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு.சாத்தப்பன் மேலாளர்- ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் CSR, நமது அறக்கட்டளை திரு.தியாகராஜ் Ex.Army & Rtd.SBI, திருமதி.பிரேமா பாலாஜி CSR, திரு.சந்தோஷ், மற்றும் DEC 3 மான்குமார், மற்றும் DEC 3 உறுப்பினர்களோடு நானும் கலந்துகொண்டு கல்வியை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது என்ற விதையை விதைத்து வந்தோம் நன்றி.
ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனமானது இந்திரா அறக்கட்டளையோடு இணைந்து, ஞாயிற்றுகிழமை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள DEC 3 இயக்க அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்க்கும் பள்ளிக்கூடம் செல்லும் பை, பென்சில் பாக்ஸ், 2 பென்சில், 1 பேனா, ஏறேசர், சார்பெனர் ஆகியவை அடங்கிய ரூபாய் 1250 மதிப்புள்ள உபகரணங்கள் 58 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு.சாத்தப்பன் மேலாளர்- ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் CSR, நமது அறக்கட்டளை திரு.தியாகராஜ் Ex.Army & Rtd.SBI, திருமதி.பிரேமா பாலாஜி CSR, திரு.சந்தோஷ், மற்றும் DEC 3 மான்குமார், மற்றும் DEC 3 உறுப்பினர்களோடு நானும் கலந்துகொண்டு கல்வியை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது என்ற விதையை விதைத்து வந்தோம் நன்றி.
திரு.சசிகாந்த் செந்தில் MP திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, இந்திரா அறக்கட்டளையின் "பழங்குடியினரின் எழுச்சி(Arise of Tribal)" என்ற ப்ரொஜெக்ட்யை எடுத்துரைத்து, நாம் இணைந்திருக்கும் மற்றும் பிரயாணம் செய்த 40+ கிராம தகவல்களை பகிர்ந்துகொண்டு, சுமார் 10 கிராம பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை ஆதாரத்துடன் பகிர்ந்துகொண்டோம் , மேலும் MP அவர்கள் அவருடைய அனுபவத்தையும் மிக துல்லியமாக நம் குழுவினரோடு பகிர்ந்துகொண்டு, ஒருசில நிரந்தர தீர்வுகாண வழிமுறையையும் பகிர்ந்துகொண்டதோடு மற்றும் இல்லாமல், அத்தகவல்களை சேகரித்து கொண்டு நிரந்தர தீர்வைநோக்கி நாம் பயணிக்கலாம் என மிகுந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளை எங்களிடம் விதைத்தார். இந்நிகழ்வில் இந்திரா அறக்கட்டளையின் ஆண்டு அறிக்கையை 2023-2024 கொடுத்துவிட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒட்டு/ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர், காரணையில் வசிக்கும் இருளர் இன பழங்குடி மக்களான 100+ குடும்பத்தினரின் பிள்ளைகள் பள்ளி செல்ல, மற்றும் அம்மக்கள் வேலை செல்ல மினி பேருந்து, 108 ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசை தேவைகளுக்காக நமது அறக்கட்டளை எடுத்த முயற்சிகள் மற்றும் அக்கோரிக்கையை அவரிடம் வைத்தோம், அவரும் கூடிய விரைவில் மினி பேருந்து அமைத்து தரப்படும் என வாக்குரைத்தார். இந்நிகழ்வில் நமது மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் திரு.அன்புச்செழியன், திரு.தியாகராஜ் (Rtd.Army & SBI), திரு.மனோகர் (Rtd.Central Govt.) , திருமதி.மனோகர் அவர்களுடன் நானும் கலந்துகொண்டேன். வறுமை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக நாம் நிற்கவில்லை என்றால் வேறு யார் நிற்பார்கள்? ஒன்றிணைவோம் வாருங்கள். நன்றி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒட்டு/ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர், காரணையில் வசிக்கும் இருளர் இன பழங்குடி மக்களான 100+ குடும்பத்தினரின் பிள்ளைகள் பள்ளி செல்ல, மற்றும் அம்மக்கள் வேலை செல்ல மினி பேருந்து வேண்டும் என்ற கோரிக்கையை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கிருஷ்ணாமி அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவரிடமிருந்து ஆதரவு கையெழுத்தையூம் பெற்றுக்கொண்டு, திரு.G.செல்வம் General Manager - MTC அவர்களிடம் கடந்த மார்ச் மாதம் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை, மேலும் அப்பகுதியில் வாழும் மக்களின் சுகாதாரம், பெண்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் அம்மக்களின் அன்றாட வாழ்வின் பிரச்சனைகள் குறித்து ஓவ்வொருவரு குடும்பமாக சந்தித்து பெற்றுக்கொண்டதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்து வந்தோம். கடுமையான வெயிலின் மத்தியிலும் இச்சேவை செய்த நமது அறக்கட்டளை தன்னார்வலர்கள் 1) திரு.தியாகராஜ் Ex-Army Rtd.SBI, 2) திரு.மனோகர் Rtd.Central Govt. 3) திருமதி.மனோகர் 4) திரு.ஹவில்தார்.செந்தில் Rtd.Army அவர்களுடன் நானும் கலந்துகொண்டேன். ஒன்றிணைவோம் வறுமை ஒழிப்போம்.
திரு.ஜோசப் சாமுவேல் MLA., அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து, விளிம்பு நிலையில் வறுமை கோட்டிற்குகீழ் வாழும் மக்களின் ஒருசில இன்னல்களை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மக்கள் சார்பாக நமது அறக்கட்டளை மூலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், உடனே அந்தந்த அதிகாரிகளிடம் பேசி தீர்வை வழங்கினார். விளிம்பு நிலையில் வாழும் ஏழை மக்களுக்காக நாம் எந்தவித பாகுபாடுன்றி இணையும்போது தான் வறுமையை ஒழிக்க முடியும், இந்நிகழ்வில் நானும் மற்றும் நமது அறக்கட்டளை திரு.தியாகராஜ் (Ex-Army & Rtd.SBI) அவர்கள்.
திரு.ஜோசப் சாமுவேல் MLA., அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து, விளிம்பு நிலையில் வறுமை கோட்டிற்குகீழ் வாழும் மக்களின் ஒருசில இன்னல்களை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மக்கள் சார்பாக நமது அறக்கட்டளை மூலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், உடனே அந்தந்த அதிகாரிகளிடம் பேசி தீர்வை வழங்கினார். விளிம்பு நிலையில் வாழும் ஏழை மக்களுக்காக நாம் எந்தவித பாகுபாடுன்றி இணையும்போது தான் வறுமையை ஒழிக்க முடியும், இந்நிகழ்வில் நானும் மற்றும் நமது அறக்கட்டளை திரு.தியாகராஜ் (Ex-Army & Rtd.SBI) அவர்கள்.
தொல்.திருமாவளவன் MP அவர்களின் 62 வது பிறந்தநாளான 17/ஆகத்து/2024 அன்று ஆவடி மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் ஆவடி.மு.ஆதவன் மாவட்ட செயலாளர் தலைமையில் பெண்களுக்காக ரூபாய் 3000 மதிப்புள்ள "மார்பக புற்றுநோய் நவீன பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமானது ஆவடியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி மஹாலில் நடத்தப்பட்டது". இம்முகாவில் ஆவடி 41வது மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி பாண்டியன் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் திரு.ஜெயக்குமார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு காலை 10 மணி அளவில் துவங்கப்பட்டு இரவு 8 மணி வரை ஏராளமான பெண்கள் "மார்பக புற்றுநோய் நவீன பரிசோதனையில் பங்குபெற்று உடனே (Report) அறிக்கையை பெற்றுக்கொண்டு மிகுந்த பயன்பெற்றனர். மேலும், இதனை போன்று பல முகாம்கங்கள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை திரு.ஆவடி மு.ஆதவன் அவர்கள் மனைவியிடம் வைத்தனர். இம்முகாமை சிறப்பாக நடத்திய வழக்கறிஞர் ஆவடி.மு.ஆதவன் அவர்களுக்கும், ஒருங்கிணைக்க உதவிய தேனீ கேன்சர் இன்ஸ்டிடியூட் நிறுவனர் மருத்துவர் திரு.மதிஅர்ஜூன் அவர்களுக்கும்,தன்னார்வலர்களாக சேவை செய்த இந்திரா அறக்கட்டளை திரு.தியாகராஜன்(Rtd.SBI), திரு.மனோகர்(Rtd.Central Govt.), திரு.தினகரன்(Professor), திரு.சோமு(Entrepreneur) அவர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த மிக்க நன்றி. இவர்கள் அனைவருடன் இந்திரா அறக்கட்டளை நிறுனவர் திரு.ரூபனாகிய நானும் கலந்துகொண்டு சிறப்பித்தோம். ஒன்றிணைவோம் புற்று நோய் என்கின்ற அரக்கனை ஒழிக்க நன்றி.
மார்பக புற்றுநோயானது, பெண்களை தாக்கும் புற்றுநோய் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது என்கின்ற புள்ளி விவரங்கள் மிகுந்த அச்சத்தை உருவாக்குகின்றது, ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து புற்றுநோய் என்கின்ற அரக்கனை ஒழிக்க எடுக்கும் விழிப்புணர்வு செயல்கள் தான் நம் தாய்குலத்திற்கு செய்யும் மிகப்பெரிய சேவையாகும். ஆவடி 41வது வார்டில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் /கல்வி குழு உறுப்பினர் திருமதி பா.சாந்திபாண்டியன்(councilor) தேசியகொடியேற்றி இனிப்புகள் வழங்கி, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் MP அவர்களின் 62 வது பிறந்தநாள் விழாவில் ஆகத்து 17 சனிக்கிழமை அன்று ஆவடி மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பெண்களுக்காக முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் ரூ.3000 மதிப்புள்ள இலவச "மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு" முகாமுக்கான துண்டு பிரசுரங்கள் இல்லங்கள் தோறும் விநியோகிக்கப்பட்டன. துண்டு பிரசுரங்கள் இல்லங்கள் தோறும் விநியோகிக்கும் இந்நிகழ்வில் தலைமை ஏற்ற வழக்கறிஞர் ஆவடி.மு.ஆதவன் மற்றும் அவர்கள் குடும்பத்தினரோடு அறக்கட்டளை நிறுவனர் நானும் மற்றும் அறக்கட்டளை தன்னார்வலர் திரு.சோமு அவர்களும் கலந்துகொண்டோம். நன்றி
இந்திரா அறக்கட்டளை மற்றும் தேனீ கேன்சர் இன்ஸ்டிடியூட் இணைந்து ஆகஸ்ட் 12 அன்று டாக்டர்.தர்மாம்பாள் அரசு மகளிர் கல்லுரியில் NSS மாணவிகளுக்கு மற்றும் பேராசிரியர்களுக்கும் புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய் எவ்வாறு வருகின்றது? தடுப்பூசி, சுயபரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை குறித்த விழிப்புணர்வானது மருத்துவர்கள் Dr. Madhyaarjun, Dr. Kishore Kumar, Dr. Sharmila, Dr. Yamini அவர்களால் மிக துல்லியமான தகவல்களுடன் கூடிய சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை சிறப்பாக நடத்திய மருத்துவர்கள் குழு மற்றும் நடத்த உதவிய கல்லுரி முதல்வர் திருமதி.ஹெப்சிபா, ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் திருமதி.உஷா மற்றும் எல்லா ஆசிரியர் அவர்களுக்கும் இந்திரா அறக்கட்டளையின் சிரம் தாழ்ந்த நன்றி. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நமது அறக்கட்டளையின் ஆலோசனை குழு மூத்த உறுப்பினர் திரு.அன்புச்செழியன் அண்ணன் அவர்களுடன் நானும் கலந்துகொண்டு சிறப்பித்தோம். வரும்முன் காப்பதே நலம், நோய் இல்லாத நாளைய சமுதாயத்தை நம் தமிழகத்தில் உருவாக்குவோம். நன்றி 🙏🏽
Thank you to the Lions Club President Avadi Mr.Rahul Bohra for the kind invitation to the installation ceremony of the President, Secretary, and Treasurer. Both myself and our senior advisory committee member, Mr. Anbucheziyan, attended to convey our best wishes and invited them to collaborate on our NGO projects. Together, let us work towards eradicating poverty. Thanks.🙏🏽
லயன்ஸ் கிளப் ஆவடி தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியேற்பு விழாவிற்கு அன்பான அழைப்பு விடுத்த தலைவர். திரு.ராகுல் போஹ்ரா அவர்களுக்கு நன்றி. இந்திரா அறக்கட்டளை நிறுவனராகிய நானும், நமது மூத்த ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு. அன்புச்செழியனும் கலந்து கொண்டு, எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து, எங்கள் அரசு சாரா திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்தோம். ஒன்றுபட்டு வறுமையை ஒழிப்போம். நன்றி.
கொரோனாவால் கணவன் இறந்துவிட, தான் பெற்ற பிள்ளைகளை எவ்வாறு படிக்க வைத்து சமுதாயத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வரப்போகின்றோம் என்கின்ற வேதனையோடு கூடிய கணவன் இறந்து வலி அவளை அடக்கப்பார்த்தாலும், தான் பெற்ற பிள்ளைகளுக்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தவளின் தற்சமய நிலையை அறிந்த சென்னை தி.முல்லை 26வது வார்டு கவுன்சிலர் திருமதி.மாலா அவர்கள் நமது அறக்கட்டளையையோடு இணைந்து கல்வி கட்டணத்திற்கான காசோலையை வழங்கி, கல்வியை எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக்கூடாது என்று அறிவுரையுடன் கூடிய நம்பிக்கையை விதைத்தோம். பெண்பிள்ளையின் படிப்பிற்கு உதவிய நமது இந்திரா அறக்கட்டளையின் ஆதரவாளர்க்கும் மற்றும் கவுன்சிலர் அவர்களுக்கும் எங்களுடைய சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவிக்கின்றது
கணவன் ஒரு மாற்றுத்திறனாளி, மனைவி ஒரு கூலி தொழிலாளி, நிரந்தர வருமானம் என்றெல்லாம் கிடையாது. பெறும் குறைந்த சம்பளம் வீட்டு வாடைகைக்கும், அன்றாட செலவிற்கு மற்றுமே போதும்படியாகத்தான் இருக்கும், ஆனால் தான் பெற்ற இரு பெண்பிள்ளைகககளை படிக்கவைக்க போராடிய இக்குடும்பத்திற்கு இந்திரா அறக்கட்டளை கல்வி கட்டணத்திற்கான காசோலையை வழங்கி, கல்வியை எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக்கூடாது என்று அறிவுரையுடன் கூடிய நம்பிக்கையை விதைத்தோம். பெண்பிள்ளையின் படிப்பிற்கு உதவிய நமது இந்திரா அறக்கட்டளையின் ஆதரவாளர்க்கு எங்களுடைய சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவிக்கின்றது.
கணவனின் திருமணத்தை தாண்டிய உறவால், மனைவி மற்றும் பெற்ற இரு பெண்பிள்ளைகளையும் விட்டுவிட்டு, கடந்த 5 வருடமாக கள்ள உறவில் இருந்து கொண்டு வருகின்றான் இவன். நீதிமன்றத்தையும் நாடாமல், சட்டப்படி விவகாரத்தை பெற்றுக்கொள்ளாமல், தான் பெற்ற இரு பெண் பிள்ளைகளின் எதிர்க்காலத்தை கருத்தில் கொள்ளாமல், கணிசமான தொகையும் தராமல் கள்ள உறவு இனிக்கிறது. ஆனால் மனைவியோ தான் பெற்ற இரு பெண் பிள்ளைகளின் கல்விக்காக வேலை செய்கின்றாள். கடுமையான நிதி மற்றும் மனஉளைச்சலில் இருந்த அக்குடும்பத்திற்கு இந்திரா அறக்கட்டளை இரு பெண்பிள்ளைகளின் கல்விக்கான காசோலையை வழங்கியது. கணவன்மாரே/மனைவிமாரே கள்ள உறவு நிரந்தரம் அல்ல, பிற கணவனை/மனைவியை திருடாதே. இரு பெண்பிள்ளைகளின் படிப்பிற்கு உதவிய என் நண்பருக்கு இந்திரா அறக்கட்டளை எங்களுடைய சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவிக்கின்றது.
9ந் தேதி ஞாயிற்று கிழமை, காலை 10 மணிக்கு இந்திரா அறக்கட்டளை மற்றும் தேனீ புற்றுநோய் இன்ஸ்டிடியூட் இணைந்து, முதற்கட்டமாக அம்பத்தூர் அருகிலுள்ள MGR நகரில் பழங்குடி இனத்தை சார்ந்த நரிக்குறவர் மக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்புணர்வு, பரிசோதனை பற்றிய விவரங்கள், அறுவைசிகிச்சை பற்றி எடுத்துரைத்து, அதனை தொடர்ந்து அம்முகாமில் பகிர்ந்து கொண்ட 100 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் நமது அறக்கட்டளை ஆலோசனைக்குழு மூத்த உறுப்பினர் திரு.அன்புச்செழியன், CSR பிரிவு திருமதி பிரேமா பாலாஜி, தேனீ புற்றுநோய் இன்ஸ்டிடியூட் நிறுவனர் மருத்துவர் திரு.R.மதியர்ஜுன் அணு புற்றுநோயியல் நிபுணர் (Dr. Madhyaarjun R Nuclear Oncologist) மற்றும் அவரது மருத்துவ குழுவினரூம் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இந்திரா அறக்கட்டளை சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். விளிம்பு நிலையில் உள்ளோரும் வாழ்வில் முன்னேற்றேம் அடைய நாம் ஒன்றிணைவோம் நன்றி
இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் (MLA ) திரு.ஐட்ரீம் இரா.மூர்த்தி அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து பழங்குடி இன மக்களின் நல் வாழ்விற்கு நமது இந்திரா கட்டளை முன்னெடும் திட்டங்கள்(projects) பற்றி எடுத்துரைத்து அறிவுரையுடன் கூடிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டு வந்தோம். வறுமையை ஒழிக்க ஒன்றிணைவோம் நன்றி
தேனீ கேன்சர் இன்ஸ்டிடியூட்(Theni Cancer Institute) நிறுவனர் மருத்துவர் திரு.R.மதியர்ஜுன் அணு புற்றுநோயியல் நிபுணர் (Dr. Madhyaarjun R Nuclear Oncologist) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து தேனீ கேன்சர் இன்ஸ்டிடியூட் projects(திட்டங்கள்) பற்றி மேலும் தெரிந்துகொண்டு, நமது இந்திரா அறக்கட்டளையின் projects(திட்டங்கள்) பற்றி எடுத்துரைத்து, இரு நிறுவனங்களும் இணைந்து பழங்குடி மக்களுக்கு பொது ஆரோக்கியம், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது, மிகவும் அன்புடன் மற்றும் தாழ்மையுடன் பழங்குடி மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணித்து கொண்ட மருத்துவருக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் பகிர்ந்துகொண்டு வந்தோம். ஒன்றிணைவோம் வறுமை என்ற புற்றுநோயை ஒழிக்க, நன்றி
திருமணத்தை தாண்டிய தகாத உறவால் தன் கணவன் பிரிந்து சென்று வருடங்கள் கடந்தாலும், தன் ஒரே ஒரு மகளுக்காக என்றாவது ஒருநாள் தன் கணவன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவளுக்கு தன் கணவன் இறந்து விட்டான் என்கின்ற செய்தி தலையில் இடிவிழுந்தது போல தெரியவர, திரும்பி வருவான் என்ற நம்பிக்கையும் நொறுங்கிப்போனது. தன் கணவனை இழந்தாலும், தன் உடல்நிலை சரி இல்லாதபோதிலும் எப்பாடு பட்டாவது தன் மகளுக்கு கல்வியை கொடுத்து விட போராடுகின்றாள், நமது இந்திரா அறக்கட்டளையின் ''பெண்ணுக்கு கல்வி கொடுப்போம்' என்ற ப்ராஜெக்ட்(Project) திட்டத்தில் மூலம், முழு கல்வி உதவி தொகையை வழங்கி அக்குடும்ப கஷ்டத்தில் பங்க்கெடுத்துக்கொண்ட நன்கொடையாளர் குடும்பத்திற்கு மிக்க நன்றி. காசோலை வழங்கும் நிகழ்வில் என்னுடன் அன்பு சகோதரர் திரு.ஆபிரகாம் அவர்கள். ஒருவேளை நீங்களும் இதே போன்று உதவ விரும்பினால் எங்களை தொடர்புகொள்ளுங்கள், நாம் ஒன்றிணைந்து வறுமை ஒழிப்போம். நன்றி
அன்னையர் தினத்தை முன்னிட்டு 12, மே சுமார் 11:30 மணி அளவில் திருமுல்லைவாயிலில் வசிக்கும் நாடோடி இன மக்கள் மற்றும் பெண்பிள்ளைகளுடன் இரண்டு மணி நேரம் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கணவர் இழந்த 20 பெண்களுக்கு புது புடவை வழங்கப்பட்டு, அன்னையர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அம்மக்கள் 120 பேருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் கேக் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. மிகுந்த மழையின் மத்தியிலும் இந்நிகழ்வில் தலைமை ஏற்று சிறப்பித்த 26வது வார்டு கவுன்சிலர் திருமதி.மாலா அவர்கள் திமுக, வழக்கறிஞர் திரு.ஆதவன் அவர்கள் விசிக மா.செ ஆவடி மாநகர், திரு. முல்லை செந்தமிழன் சந்தீப் அவர்கள், திரு.ரமேஷ் அவர்கள், திரு.மதிவாணன் அவர்கள், அன்பு தம்பிகள் அப்பு, வழக்கறிஞர் புகழேந்தி, சுராஜ், சஞ்சய் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த அன்பு தம்பி.ஆபிரகாம் அவரது துணைவியார், அவரது பிள்ளைகளுக்கும், நண்பர் திரு சோமு அவர்களுக்கும் இந்திரா அறக்கட்டளையின் சிரம் தாழ்ந்த நன்றிகள். தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். ஒன்றிணைவோம் வறுமை ஒழிப்போம், நன்றி
மே 1, உழைப்பாளர் தினத்தன்று இந்திரா அறக்கட்டளை & Thol.Thirumavalavan விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆவடி மாநகர் இணைந்து நடத்திய தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் நாடோடி இன மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகைதந்து சிறப்பித்த அறக்கட்டளை தன்னார்வலர்கள் மற்றும் வழக்குரைஞர் மு.ஆதவன் மாவட்ட செயலாளர் ஆவடி மாநகர், இர.பு.அன்புச்செழியன் மேனாள் வடசென்னை மாவட்டச் செயலாளர் தளபதி சுந்தர் மாவட்ட செயலாளர் திருவள்ளூர் மேற்கு, அருண் கவுதம் மாவட்டச்செயலாளர், திருவள்ளூர், ஞானமுதல்வன் மாவட்டச் செயலாளர் திருவள்ளூர், ஆ முல்லை செந்தமிழன் சந்திப் ஆவடி கிழக்கு பகுதி மாநகர செயலாளர் நல திட்ட உதவிகள் வழங்க வருகை தந்த மாநில மாவட்ட தொகுதி நகர வட்ட பொறுப்பாளர்கள் ஆகிய ஓவ்வொருவருக்கும் அறக்கட்டளை திரு.ரூபன் பொன்ராஜின் மிக்க சிரம் தாழ்ந்த நன்றி. இந்நிகழ்வில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு, மோர், தண்ணீர் பழம் மற்றும் 5கிலோ அரிசி பைகள் நாடோடி இன 60 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வு சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த ஆவடி காவல் ஆணையகரத்திற்கும், திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மற்றும் காவலற்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி. ஒன்றிணைவோம் வறுமையை ஒழிப்போம் நன்றி
ஆவடி அருகிலுள்ள திருமுல்லைவாயிலில் வசிக்கும் நாடோடி இன மக்களை சந்தித்து, மே 1 அன்று இந்திரா அறக்கட்டளை மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆவடி மாநகர், திருவள்ளூர் மாவட்டம் இணைந்து நடந்தும் உழைப்பாளர் தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்து வந்தோம். அவர்களும் கண்டிப்பாக வருகின்றோம் என்றனர். இந்திரா அறக்கட்டளை நிறுவனர் ரூபன் பொன்ராஜ் உடன் தோழர்.முல்லை செந்தமிழன் சந்தீப் அவர்கள்.
மூத்த வழக்கறிஞரும் மற்றும் வி.சி.க மாவட்ட செயலாளருமாகிய திரு.ஆவடி ஆதவன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்திக்கும் பொழுது, திருவள்ளூர் மாவட்டம் மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒட்டு/ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர் காரணையில் வசிக்கும் இருளர் இன பழங்குடி மக்கள் பேருந்து இல்லாமல் படும் துன்பங்களை நேரில்சந்திக்க வருவதாக கூறிய படியே, அவரும் மேலும் ஒரு சில சகோதர்களும் நமது அறக்கட்டளை நிறுவனர் திரு. ரூபன் பொன்ராஜ் உடன் அப்பகுதியை பார்வையிட்டு அம்மக்களின் கண்ணீர் நிறைந்த வாழ்க்கையை கேட்டறிந்து அப்பகுதி பிள்ளைகள் பள்ளி செல்ல, மற்றும் அம்மக்கள் வேலை செல்ல மினி பேருந்து வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கூறிவிட்டு சென்றார். வாருங்கள் சகோதர சகோதரிகளே, வறுமை ஒழிக்க ஒன்றுபடுவோம் நன்றி
திருவள்ளூர் மாவட்டம் மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒட்டு/ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர், காரணையில் வசிக்கும் இருளர் இன பழங்குடி மக்களான 100+ குடும்பத்தினரின் பிள்ளைகள் பள்ளி செல்ல, மற்றும் அம்மக்கள் வேலை செல்ல மினி பேருந்து வேண்டும் என்ற கோரிக்கையை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கிருஷ்ணாமி அவர்களின் கவனத்திற்கும், திரு.G.செல்வம் General Manager - MTC அவர்களின் கவனத்திற்கும் எடுத்து சென்றதை தொடர்ந்து, நமது அறக்கட்டளை மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் திரு.அன்புச்செழியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மூத்த வழக்கறிஞரும் மற்றும் வி.சி.க மாவட்ட செயலாளருமாகிய திரு ஆவடி ஆதவன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இருளர் இன பழங்குடி மக்களின் கோரிக்கை கடிதத்தின் நகலை வழங்கினோம், அவரும் அம்மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் வருவதாகவும் மேலும் நமது அறக்கட்டளையின் முயிற்சிக்கு முழு ஆதரவு தருவதாகவும், மேலும் அவரது அலுவலகத்தில் ஏழை எளியோர்க்கு என வைக்கப்பட்டுள்ள அரிசி, மளிகை சாமான பொருட்களை காண்பித்து அவர்கள் செய்யும் சமுதாய பணிகளை கூறினார். மேலும் தன்னலம் மறந்து ஏழை எளியோர்க்காக செய்யும் நமது அறப்பணிகளை வாழ்த்தியும், நாமும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டும் வந்தோம். ஒன்றிணைந்து "வறுமை ஒழிப்போம்" வாருங்கள் சகோதர சகோதரிகளே, நன்றி
Bohra Eye Hospital உரிமையாளரும் Retain Smilez நிறுவனர் மற்றும் Lions Club Avadi wing இல் ஜூலை, 1, 2024 முதல் தலைமை ஏற்க இருக்கும் திரு. Rahul Bhora அவர்களை அவரது வேலை பளு மத்தியில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்து, நமது இந்திரா அறக்கட்டளையின் Project's பற்றி எடுத்துரைத்து மேலும் projects இல் உதவி/இணைப்பு பற்றிய கோரிக்கைகளை முன்வைத்தேன், அவரும் மிக பணிவுடன் ஒரு சில projects பற்றி விவரித்து வாழ்த்துக்களை கூறி மற்றும் பெற்றுக்கொண்டோம். அனைவரும் ஒன்றிணையும் போதுதான் வறுமை ஒழிப்பு நிகழும். நன்றி
இந்திரா அறக்கட்டளை, தமிழக அரசின் "நம்ம School (ஸ்கூல்) நம்ம ஊரு பள்ளி" என்கின்ற திட்டத்தின் கீழ் இணைத்து கொண்டு "எண்ணும் எழுத்தும்" என்கிற இயக்க முன்னெடுப்பின் ஒருபகுதியாக நமது இந்திரா அறக்கட்டளை icare educuation உடன் இணைந்து 22-03-2024 அன்று AMMS CHOZHAMBEDU, வில்லிவாக்கம் பிளாக், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சி நடுநிலைப் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேதி கணிதம் இலவசமாக பயின்ற, மாணவ/வி களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் ஆவடி காவல் ஆணையர் அலுவலக காவல் உதவி ஆய்வாளர்களால் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம், கல்வியை கைவிடக்கூடாது, காவலன் செயலி மற்றும் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
நன்றி
- இரு துணை காவல் ஆய்வாளர்கள்
- திருமதி.சீதாலட்சுமி(iCare Education),
- திருமதி. கவிதா(Exnora)
- திரு.தாமோதரன் கணித ஆசிரியர் H/I
இவர்களுடன் நானும் நமது அறக்கட்டளை தன்னார்வலர்கள் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தோம். நன்றி
திருவள்ளூர் மாவட்டம் மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒட்டு/ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர், காரணையில் வசிக்கும் இருளர் இன பழங்குடி மக்களான 100+ குடும்பத்தினரின் பிள்ளைகள் பள்ளி செல்ல, மற்றும் அம்மக்கள் வேலை செல்ல மினி பேருந்து வேண்டும் என்ற கோரிக்கையை பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கிருஷ்ணாமி அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவரிடமிருந்து ஆதரவு கையெழுத்தை பெற்றுக்கொண்டு, திரு.G.செல்வம் General Manager - MTC அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, அவரும் அக்கோரிக்கையை பெற்றுக்கொண்டு தக்க நடவடிக்கை கூடிய விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஒன்றிணைந்து "வறுமை ஒழிப்போம்" வாருங்கள் சகோதர சகோதரிகளே, நன்றி
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துடன் இந்திரா அறக்கட்டளை இணைந்து பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்த அனுமதி கோரி 29/2/2024 Additional Deputy Commissioner of Police CAWC மரியாதைக்குரிய Ms.கீதா அவர்களை சந்தீத்ததை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில்லுள்ள மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர் காரணையில் சுமார் 160 இருளர் இன பழங்குடி நபருக்கு 1) குழந்தை திருமணம், 2) குழந்தை துஷ்பிரயோகம், 3) பெண்கள் அதிகாரமளித்தல், 4) ஆல்கஹால், 5) கடன் பிரச்சினைகள் மற்றும் நிதி கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு 17/03/2023 அன்று
- மூன்று துணை காவல் ஆய்வாளர்கள்,
-சகோதரி சீதா தேவி (Street Vision நிறுவனர்),
-திருமதி.ரமணி (பெண்கள் பாதுகாப்பு),
-திருமதி.திருமதி சீதாலட்சுமி(iCare Education),
-திருமதி. கவிதா(Exnora) அடங்கிய குழுவினரால் 3-6 PM வரை அளிக்கப்பட்டது.
இவர்கள் அனைவருடன் நானும் மற்றும் நமது அறக்கட்டளை தன்னார்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தோம்.
ஒன்றிணைந்து "வறுமை ஒழிப்போம்" வாருங்கள் சகோதர சகோதரிகளே, நன்றி
தெருவோரம் வசிக்கும் ஏழை பிள்ளைகளின் வாழ்வுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, கொரோனா காலகட்டத்தில் தன் தயார் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்த இக்கட்டான நேரத்திலும் சுமார் 800க்கும் மேற்பட்ட நபர்களின் உயிர்களை காப்பாற்றிய "India's First Oxygen Woman" ஆன அன்பு சகோதரி R. சீதா தேவி "Street Vision NGO" நிறுவனரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, அவர்களது Project's பற்றியும் நமது இந்திரா அறக்கட்டளை Project's பற்றியும் பகிர்ந்து கொண்டு, வருங்காலங்களில் பழங்குடியின மக்களுக்கான Project's யை முன்னெடுக்க வாழ்த்துக்களை பகிர்ந்தும் பெற்று கொண்டும் வந்தோம். அன்பு சகோதர சகோதரியே நாம் ஒன்றிணைந்து வறுமையை ஒழிக்கலாமே நன்றி
அம்பத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும், குறிப்பாக தொழிற்சாலை & கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக 1 முதல் 10 வரையிலான வகுப்புகளைக் கொண்ட (Rotary club of Ambattur) அம்பத்தூர் ரோட்டரி சங்கத்தால் நிர்வகிக்கும் TV நகர் பள்ளியில், இன்று இந்திரா அறக்கட்டளை நிறுவனராகிய நான் மற்றும் நமது அறக்கட்டளை கல்வி பிரிவு உறுப்பினர்களான திருமதி சீதாலட்சுமி(iCare Education), திரு வெங்கட் அவர்களும் அப்பள்ளி தலைமை ஆசிரியர், நிர்வாகிகள், மற்றும் ஆசிரியர்களை சந்தித்து, நமது அறக்கட்டளை Projects (திட்டங்களை) & நமது குழுவினர் பற்றி எடுத்துரைத்தேன் மற்றும் திருமதி சீதாலட்சுமி அவர்கள் 6வது வகுப்பு மாணவ மாணவியருக்கு சுமார் 15 நிமிடம் எவ்வாறு வேதிக் கணிதத்தை (Vedic Maths) உபயோகிக்க வேண்டும் என்று ஒரு சில செயற்முறைகளை கொண்டு விளக்கினார்கள். அப்பள்ளி மாணவ மாணவியர்கள் மிக அருமையான முறையில் வேதிக் கணிதத்தை புரிந்துகொண்டனர், எனவே வருகின்ற கல்வியாண்டில் அதனை எவ்வாறு அப்பள்ளிக்கு செயல்படுத்த வேண்டும் என்கின்ற திட்டத்துடன் வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம். வாருங்கள் சகோதர சகோதரிகளே நம் தேசத்து வறுமை ஒழிக்கப்பட நாம் ஒன்றிணைவோம், நன்றி
தமிழக அரசின் "நம்ம School (ஸ்கூல்) நம்ம ஊரு பள்ளி" என்கின்ற திட்டத்தின் கீழ் நமது இந்திரா அறக்கட்டளை இணைத்து கொண்டு "எண்ணும் எழுத்தும்" என்கிற இயக்க முன்னெடுப்பின் ஒருபகுதியாக ஆவடி அருகிலுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வேதி கணிதம் இலவசமாக கற்றுக்கொடுக்கும் பயிற்சியின் ஒரு பகுதியாக நமது அறக்கட்டளை கல்வி பிரிவு மூத்த உறுப்பினரும் icare educuation நிறுவனர் திருமதி சீதாலட்சுமி அவர்கள் மாணவ மாணவி கண்மணிகளுக்கு நோட் புத்தகங்கள் வழங்கி சிறப்பித்து ஊக்கபடுத்தினார். நன்றி
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துடன் இணைந்து பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்த அனுமதி கோரிய கடிதத்துடன் நமது அறக்கட்டளை சுயவிவரம் (Profile), அறக்கட்டளையின் அனைத்து அரசு சான்றிதழ்களையும், Additional Deputy Commissioner of Police CAWC மரியாதைக்குரிய Ms.கீதா அவர்களிடம் வழங்கி, நமது அறக்கட்டளை மூலம் பழங்குடியின மக்களுக்காக முன்னெடுக்கும் Projects யை எடுத்துரைத்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு, நமது வாழ்த்துக்களை கூறியும் வந்தோம். ஒன்றிணைந்து "வறுமை ஒழிக்கப்பட" வாருங்கள் சகோதர சகோதரிகளே, நன்றி
AMMS CHOZHAMBEDU, வில்லிவாக்கம் பிளாக், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சி நடுநிலைப்பள்ளி 2023-24 ஆண்டு விழாவில் இன்று 26-02-2024 விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவி செல்வங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கியும், அங்கு வந்திருந்த பெற்றோர்கள் மத்தியில் "பெண் பிள்ளைகளை விழிப்புணர்வோடு வளர்க்க தாய்மார்களின் கடமை மற்றும் பங்களிப்பை" குறித்த சிறிய உரையை உரையாற்றி அப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு, பள்ளிக்குழந்தைகளின் கலை நிகழ்ச்சியை கண்டுவிட்டு வந்தோம். "நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி" என்ற தமிழக அரசு திட்டத்தின் மூலமாக நமது இந்திரா அறக்கட்டளை இப்பள்ளியோடு இணைந்திருப்பது மிக்க மகிழ் மகிழ்ச்சி கொள்கின்றோம். வாருங்கள் சகோதர சகோதரிகளே "நம்ம ஊர் நம்ம பள்ளி" என்ற தமிழக அரசு திட்டத்தின் நம்மை இணைத்துக்கொண்டு அரசு பள்ளி மாணவ மாணவி செல்வங்களை இந்தியாவின் தூண்களாக்குவோமே.
வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் அவர்களால் நிறுவப்பட்ட "International Association for Human" Values நமது இந்திரா அறக்கட்டளை உடன் இணைந்து IAHV இன் "நிதி கல்வியறிவு திட்டம்" பற்றிய மூன்று நாள் சிறப்பு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 95 இருளர் இன பழங்குடி குடும்பத்தினருக்கு சமையல் பொருட்கள் வழங்கபட்டது. இந்நிகழ்வில் icare educuation நிறுவனர் திருமதி சீதாலட்சுமி அவர்கள், அவரது மகன் திரு வெங்கட் அவர்கள் சிறப்பு விருந்துதினராக கலந்து கொண்டனர், இவர்களுடன் நமது அறக்கட்டளை ஆலோசனை குழு மூத்த உறுப்பினர் திரு அன்புச்செழியன் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். இடம்:காரணை மாகரல் ஏரிக்கரை அருகில் சிறிய ஒலை குடிசைகள் நிறைந்த இந்திரா நகர்.
இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் (India Vision Institute) மற்றும் இந்திரா அறக்கட்டளை இணைந்து மாகரல் ஏரிக்கரை அருகில் சிறிய ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர், காரணையில் வசிக்கும் இருளர் இன பழங்குடி மக்களின் 140 நபர்களின் கண் பார்வையை பரிசோதித்து, அதில் 65 நபர்களின் குறைபாட்டை கண்டறிந்து அவர்களுக்கு 65 இலவச கண்ணாடிகள் வழங்கிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இந்நிகழ்வில் icare educuation நிறுவனர் திருமதி சீதாலட்சுமி அவர்கள், அவரது மகன் திரு வெங்கட் அவர்கள் சிறப்பு விருந்துதினராக கலந்து கொண்டனர், இவர்களுடன் நமது அறக்கட்டளை ஆலோசனை குழு மூத்த உறுப்பினர் திரு அன்புச்செழியன் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். நன்றி: இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் ஊழியர்கள்.
வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் அவர்களால் நிறுவப்பட்ட "International Association for Human" Values நமது இந்திரா அறக்கட்டளை உடன் இணைந்து IAHV இன் "நிதி கல்வியறிவு திட்டம்" பற்றிய மூன்று நாள் சிறப்பு பயிற்சியானது , மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர், காரணையில் வசிக்கும் 400 இருளர் இன பழங்குடி மக்களான 100 குடும்பத்தினரில், 50 குடும்பத்தினருக்கு இன்று காலை 15 வியாழன் காலை 10:00 மணி அளவில் தொடங்கப்பட்டது. நன்றி திரு. Dr.Sailakshmai IAHV Project Manger & அவர்களுடைய குழுவினர்கள் திரு சூசன்,திரு.கோபி மற்றும் திரு ஹரி அவர்கள். இவர்கள் அனைவருடன் நானும் நமது அறக்கட்டளை மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் திரு.அன்புச்செழியன் அவர்கள், நன்றி🙏🏽
மூத்த அரசு வழக்கறிஞரும், அம்பத்தூர் பாரதி நகர் குடியிருப்போர் நல சங்க தலைவரும், நமது அறக்கட்டளை ஆலோசனைக் குழு தன்னார்வலர் மற்றும் எனது நண்பருமாகிய திரு.தளபதி அவர்களின் அண்ணன் திரு.அறிவுக்கரசன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, நமது அறக்கட்டளை மூலம் அம்பத்தூர் மட்டும் ஆவடி பகுதியில் மேற்கொள்ள இருக்கும் அறப்பணிகளை குறித்து எடுத்துரைத்து, அவரிடம் இருந்து ஆதரவு மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு, நானும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு வந்தோம், வறுமையை ஒழிக்க இணைந்து செயல்படுவோம் நன்றி
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் பிள்ளைகளின் நாளைய வாழ்வை சிறப்பாக மாற்றுவோம் - தமிழ்நாடு அரசு நமது இந்திரா அறக்கட்டளை, தமிழக அரசின் "நம்ம School (ஸ்கூல்) நம்ம ஊரு பள்ளி" என்கின்ற திட்டத்தின் கீழ் இணைத்து கொண்டு "எண்ணும் எழுத்தும்" என்கிற இயக்க முன்னெடுப்பின் ஒருபகுதியாக நமது இந்திரா அறக்கட்டளை icare educuation உடன் இணைந்து இன்று 02-02-2024 அன்று ஆவடி அருகிலுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வேதி கணிதம் இலவசமாக கற்றுக்கொடுக்கும் வகுப்புகளை இன்று தொடங்கப்பட்டுள்ளுது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம். எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகளை icare eduction நிறுவனர் திருமதி சீதாலட்சுமி அவர்களுக்கும் மற்றும் கணித ஆசிரியர் அவர்களுக்கும் தெரிவித்து கொள்கின்றோம், நன்றி🙏🏽
வாழ்க்கை என்பது மேடுகளும், பள்ளங்களும் நிறைந்தது. அது ஒரு அழகிய குடும்பம் கணவன் மனைவி இருவரும் நன்றாக படித்தவர்கள், கணவன் பொறியாளராக வேலை செய்து கொண்டிருக்கிறார், ஒருநாள் திடீரென்று வலிப்பு வந்து சுமார் 10 நாட்கள் ICU இல் இருந்து, தன் மனைவியின் கண்ணீர் மற்றும் மனமுடைந்த பிராத்தனையால் மறுபிழைப்பை பெற்றவனால் மீண்டும் பழைய உடல் நிலையை எட்டமுடியவில்லை, முடங்கியது அவனுடைய வாழ்க்கை, தன் மனைவியின் உள்ளம் உடைந்தது எதிர்கால கவலை மற்றும் கடந்த பத்து மாதமாக அவனால் வேலைக்கு செல்ல முடியவில்லை . நிற்கவே முடியவில்லை என்று அழுகிறான், இந்நிலையில் இந்த மனமுடைந்த குடும்பத்தை இந்திரா அறக்கட்டளை சந்தித்து மருத்துவ செலவிற்காக ஒரு தொகையை காசோலையாக வழங்கி, கூடிய விரைவில் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்பிக்கை தரும் விதைகளை விதைத்து வந்தோம். எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை நாம் உணர்வோம், இருக்கும் வரை நாம் பலருக்கு உதவி புரிந்து நல்வாழ்க்கை வாழ்வோமே, நன்றி.
பேசின் ப்ரிட்ஜ் அருகாமையில் உள்ள குடிசை பகுதியில் மிகவும் வறுமையில் வாழும் 4 குடும்பங்களை கண்டறிந்து, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்டுகள், 5 கிலோ அரிசி மற்றும் தார்பாலினை நமது அலுவலகத்தில் வழங்கினோம். நன்றி! என்னுடன், நமது இந்திரா அறக்கட்டளை மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் திரு.அன்புச்செழியன், திரு.சித்தார்த், திரு.சுரேஷ் மற்றும் வழக்கறிஞர் திரு பாலாஜி அவர்கள்.
"என்னா வெயில்னாலும் பொலச்சிபோயா, இந்த மழையும் புயலும் தான் எங்களை எப்பொழுதும் வாட்டி வதைச்சிறும், குடிச ஒலிவி தூக்கம் போய்டும், வேலைக்கும் போவமுடியாது, எல்லாரும் கூலி தான், சமைக்க முடியாது, கடனுக்கு வட்டி கட்டமுடியாது, இதோ இப்போ இந்த குளிர் வேர எங்களை வாட்டுதுயா, பச்சை கொழந்தையை வச்சிருக்கோம், வயசான கிழவன் கிழவி லாம் இருகாங்கயா, திரும்ப வேற மழை வருதுன்னு வேலை மேல சொன்னாங்கயா, ரொம்ப பயம்மா இருக்துயா என்னா பண்ணனும்னு தெரிலயா, எங்க இருளர் மக்களோட வாழ்க்கையே இப்படிதான்" மேலே உள்ள வலி மிகுந்த வார்த்தைகளை நமது அறக்கட்டளை உறுப்பினரோடு பகிர்ந்து கொண்டு கண்ணீருடன் விடைபெற்றால் அந்த இளம் விதவை, 10-டிசம்பர்-2023 அன்று 70 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்டுகளை வழங்கியதை தொடர்ந்து, இன்று Aspire Systems CSR குழுவினர் நமது அறக்கட்டளையுடன் இணைந்து "மிக்ஜம் சூறாவளி/மழையால்" மிகவும் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில்லுள்ள மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒலை குடிசை பகுதியான இந்திரா நகர் காரணை மற்றும் மோரல் வசிக்கும் 40 இருளர் இன பழங்குடி குடும்பத்தினரீன் ஓவ்வொரு குடிசைக்கும் சுமார் ரூபாய் 1500 மதிப்புள்ள (Multi-layered cross-laminated) 15*18=270 Sqft அளவுள்ள தார்பாலின் வழங்கி, நம்பிக்கை தரும் விதைகளை விதைத்து விட்டு வந்தோம். நன்றி🙏🏽 என்னுடன் நமது அறக்கட்டளை மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் அண்ணன் திரு, அன்புசெழியன் அவர்கள்.
Aspire System CSR Aspire Systems குழுவினர் நமது இந்திரா அறக்கட்டளையுடன் இணைந்து 10-டிசம்பர்-2023 சரியாக மதியம் சுமார் 1 மணி அளவில், "மிக்ஜம் சூறாவளி/மழையால்" மிகவும் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில்லுள்ள மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய ஒலை குடிசை பகுதியான அம்பேத்கர் காலனி மற்றும் இந்திரா நகர் காரணையில் வசிக்கும் 300 இருளர் இன பழங்குடி மக்களான 70 குடும்பத்தினரீன் ஒரு மாததிற்கு தேவையான சுமார் ஒரு இலட்ச மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களான "5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அனைத்து சமையல் பொருட்களுடன்,அவர்களின் 100 குழந்தைகளுக்கும் தேவையான ஹெல்த் மிக்ஸ் பவுடர், பிஸ்கட், சாக்லேட், பிரட் மற்றும் ஒருசில நொறுக்கு தீனி பொருட்களுடன்" நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை கூறியும், மற்றும் கல்வியை கைவிட்டுவிடக்கூடாது என்ற மிக வலிமையான விதைகளை விதைத்து விட்டு வந்தோம். நன்றி🙏🏽
"மிக்ஜம் சூறாவளி/மழையால்" திருவள்ளூர் மாவட்டத்தில் மாகரல் ஏரிக்கரை ஒலை குடிசையில் வசிக்கும் பழங்குடி இருளர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடிசை பகுதிகளான அம்பேத்கர் காலனி மற்றும் இந்திரா நகர் காரணையில் வசிக்கும் சுமார் 100 இருளர் இன பழங்குடி மக்களின் கூலி வேலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், தங்கள் குழந்தை மற்றும் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான (அரிசி, பருப்பு, எண்ணெய்) வேண்டும் என்ற கோரிக்கைகளைப் 06-டிசம்பர் 2023 அன்று பெற்று கொண்டதை தொடர்ந்து, 09-டிசம்பர்-2023 இன்று காலை 7 மணி அளவில் மீண்டும் நானும் நமது குழுவினரும் திரு அன்புச்செழியன், மற்றும் திரு ஐசக் அவர்களும், அம்மக்களின் குடும்ப நபர்களின் எண்ணிக்கைகளை சேகரித்து வந்தோம், இந்த அழுத்தமான தேவைகளை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்வந்த Aspire System CSR நமது இந்திரா அறக்கட்டளையுடன் இணைந்து நாளை 10-டிசம்பர்-2023 சரியாக மதியம் சுமார் 1 மணி அளவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். எனவே தன்னார்வலகர்கள் கலந்து கொள்ளலாம். நன்றி.
திரு.பாபாசாகேப் அம்பேத்கர் ஐயா அவர்களின் மறைந்த தினமான டிசம்பர் 6 இன்று காலை சுமார் 7 மணி அளவில் "மிக்ஜம் சூறாவளி/மழையால்" மிகவும் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் மாகரல் ஏரிக்கரை ஒலை குடிசையில் வசிக்கும் பழங்குடி இருளர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடிசை பகுதிகளான அம்பேத்கர் காலனி மற்றும் இந்திரா நகர் (ஆவடி சந்திப்பில் இருந்து வெல்டெக் பொறியியல் கல்லூரி வழியாக வீரபுரம் அடுத்து சுமார் 10 கி.மீ.) வசிக்கும் சுமார் 100 குடும்பங்களை நானும் எங்கள் குழுவினரும் திரு அன்புச்செழியன், மற்றும் திரு ஐசக் அவர்களும் பார்வையிட்டு, தற்சமயம் எங்கள் கையிருப்பிலிருந்த தார்பாய் மற்றும் ஒரு சில உதவிகள் வழங்கினோம். நாங்கள் சந்திக்கும்போது, மழை முடிந்து குளிர்காலம் நெருங்குவதால் பனியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தார்ப்பாய் மற்றும் மழையால் அவர்கள் கூலி வேலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், தங்கள் குழந்தை மற்றும் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்(அரிசி, பருப்பு, எண்ணெய்) வேண்டும் என்ற கோரிக்கைகளைப் பெற்றோம். இந்த அழுத்தமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு முக்கியமானது. நன்றி!
ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின்(Aspire Systems ) கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) பிரிவு, நமது இந்திரா அறக்கட்டளையுடன் இணைந்து, கடந்த அக்டோபர் 8 தேதி 2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகிலுள்ள சட்டமங்களதில் வாழும் இருளர் பழங்குடியினபர் குடும்பகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி, அந்நிகழ்வில் அவருடைய இரண்டு கோரிக்கைகளான,
1) மழை காலத்தில் தங்களுடைய கூடாரம் ஒழுகுவதால் தார்பாலின் வேண்டும் என்றும்,
2) மேலும் மழை காலத்தில் சரியான கூலி வேலை இருக்காததால் உணவிற்கு கஷ்டப்படும் சூழல் உருவாகுவதால் ஒரு மாத மளிகை பொருட்களை கேட்டுக்கொண்டனர்.
அக்கோரிக்கைளை Aspire Systems கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) பிரிவு நவம்பர் 19 தேதி 2023 அன்று சுமார் 1 இலட்சம் மதிப்பிலான பொருட்களை நமது இந்திரா அறக்கட்டளையுடன் இணைந்து
1) 23 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு தார்பாலின்,
2) 45 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ஒரு மாத மளிகை பொருட்களை வழங்கினோம்.
மேலும் எக்காரணம் கொண்டும் கல்வியை விட்டுவிட கூடாது என்றும் வலியுறுத்தினோம்.
நன்றி
- Aspire Systems Pvt Ltd CSR பிரிவு உறுப்பினர்கள்/ஊழியர்கள்.
- நமது அறக்கட்டளை திரு.அன்புசெழியன் அவர்கள், திரு.சித்தார்த்தா அவர்கள், மற்றும் திருமதி. பிரேமா பாலாஜி அவர்கள்.
மேலும் நானும் இவர்களுடன் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தோம்.
ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின்(Aspire Systems Pvt Ltd) Aspire Systems கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திரா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பின்வரும் வழிகளில் சமூகத்திற்கு ஆதரவை வழங்கியுள்ளோம்:
1) 25 இருளர் பழங்குடியின குழந்தைகளுக்கு பள்ளிப் பைகளை வழங்கினோம்.
2) 45 ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியை வழங்கினோம்.
3) கூடுதலாக, தேவைப்படும் முதியவர்களுக்கு பெட்ஷீட்களை வழங்கினோம்.
இந்த முன்முயற்சி, நமது சமூகத்தில் வசதி குறைந்தவர்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
நன்றி
- அன்பகம் திரு.சுரேஷ் அவர்கள்,
- நமது அறக்கட்டளை திரு.அன்புசெழியன் அவர்கள், மருத்துவர் திரு.ஜான் பால் அவர்கள்,திரு.சிவா அவர்கள், திரு.சுரேஷ் அவர்கள், திரு.நரேஷ் அவர்கள் மற்றும் திருமதி. பிரேமா பாலாஜி.
- Aspire Systems Pvt Ltd CSR பிரிவு உறுப்பினர்கள்.
இடம்: சட்டமங்களம், செங்கல்பட்டு
தேதி: 08-10-2023, ஞாயிற்றுகிழமை
பழங்குடி இருளர் இன மக்களால் 2023 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "ஜெய் பீம் பழங்குடியினர் புது வாழ்வு சங்க" குழுவினரை அவர்கள் வசிக்கும் சட்டமங்களம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 17/9/2023 அன்று சுமார் 60 குடும்பங்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளான பள்ளி செல்லும் 30 குழந்தைகளுக்கு "ஸ்கூல் பேக்"(School Bag) மற்றும் மழைக்காலம் நெருங்கி வருவதால் ஓலை குடிசையில் வசிக்கும் சுமார் 22 குடும்பங்களுக்கு தார்பாலின் வேண்டும் என்ற கோரிக்கைகளை பெற்று கொண்டு கூடிய விரைவில் நமது இந்திரா அறக்கட்டளை மூலம் வழங்குவதாக வாக்கு அளித்து வந்தோம், என்னுடன் மருத்துவர் திரு.ஜான்பால், நமது அறக்கட்டளை களப்பணியாளர் திரு.சிவா மற்றும் அன்பகம் நிர்வாகி. வாருங்கள் நாம் ஒன்றிணைந்து "வறுமையை ஒழிப்போம்" நன்றி!
டிசம்பர் 3 இயக்கம் & பீ ஹெல்த் ஸ்டூடியோ குழுமம் இணைந்து நடத்திய முப்பெரும் விழாவிற்கு, சிறியவனான என்னையும் விருந்தினராக அழைத்து "சிறந்த கல்வி சமூக சேவகர்" என்ற விருது வழங்கிய பேராசிரியர் திரு *T.M.N. தீபக் அவர்கள், மருத்துவர் S.சிவபாலன் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்கள், முன்னிலை வகித்த
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.லயன் ச.அரவிந்த் ரமேஷ் அவர்களுக்கும் இந்திரா அறக்கட்டளை சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். இவ்விருதை எங்களுடைய இந்திரா அறக்கட்டளை குழுவினர் ஒவ்வொருவற்கும் அர்ப்பணிக்கின்றேன். எங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் டிசம்பர் 3 இயக்கம் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக குழு தலைவர் திரு.மான் குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி.
முப்பெரும் விழா
மழலை மறுமலர்ச்சி மையம் அடிக்கல் நடும் விழா
உலக இயன்முறை மருத்துவர் தினம் விழிப்புணர்வு பேரணி
ஓராண்டு நிறைவு - பீ பிசியோ லைஃப் ( மாற்று திறனாளிகளுக்கான இலவச இயன்முறை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம்)
நாள் : செப்டம்பர் 8, 2023, வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : இடம் பி பிசியோ லைப், பெரும்பாக்கம், சென்னை -600131
தன் கணவர் இறந்து சுமார் 7 வருடங்கள் கடந்தாலும், மாற்றுத்திறனாளியான சற்றும் நடக்க இயலாத இரு கால்களும் ஊனமுடைய பெண் தன் இரு பெண்பிள்ளைகள் எவ்வாறாவது படித்து விட வேண்டும் என போராடுகின்றாள். சுமார் 88 வயது மதிக்க தக்க முதியவர் தன் மாற்றுத்திறனாளியான மகள் மற்றும் இரு பேர பெண்பிள்ளைகள் படும் கஷ்டத்திற்கு உதவு வேண்டும் என அந்த வயது முதிர்ந்த பெரியவர் சாலை ஓரங்களில் காய்கறி விற்று அவர்களுக்கு உதவி செய்து வருகின்றார். இந்நிலையில் PMC Charitable Group குழுவினர் அப்பெண்பிள்ளையின் இரண்டாம் ஆண்டு கல்லுரி கட்டணம் கட்ட முன்வந்து, அக்குழுவின் பிரதிநிதி திரு சுமிதா தமிழரசன் அவர்கள் இந்திரா அறக்கட்டளை அலுவலகம் வந்து அந்த வயதுமுதிர்ந்த பெரியவர் மற்றும் கல்லுரி படிக்கும் பெண் பிள்ளையை சந்தித்து காசோலை வழங்கி நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்து விட்டு சென்றார்.
இந்திரா அறக்கட்டளை மட்டும் அரைஸ் குழுவினர் இணைந்து 15/7/2023 நடத்திய ''இருளர் இன மக்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் ஓர் நாள்'' நிகழ்ச்சியில் சின்ன எடையாத்தூர், நடுவக்கரை,குடிபேரம்பாக்கம் ஆகிய மூன்று குட்கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இன இருளர் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் பனையூர் திரு.பாபு MLA அவர்களை அவரது இல்லத்தில் இன்று நானும் மற்றும் வழக்கறிஞர்கள், நமது அறக்கட்டளை ஆலோசனை குழு மூத்த உறுப்பினர் அண்ணன் திரு.அன்புசெழியன், மற்றும் திரு. சித்தார்த், திரு சுரேஷ், மற்றும் திரு.நரேஷ் சந்தித்து கோரிக்கைகளை வழங்கினோம். அதனைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் உடனே தக்க நடவடிக்கை எடுத்து அம்மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்கு கூறினார். சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பாபு அண்ணன் அவர்கள் கிறிஸ்துவிற்கு பயப்படும் தேவமனிதன் என்பதும் மற்றும் அவரது தொகுதியில் ஏழை/ஆதரவற்ற மக்கள் மரிக்கும் பொழுது அவரது சொந்த செலவில் அனைத்து காரியங்களையும் (Freezer Box/பந்தல் etc...) ஒழுங்குபடுத்தி தருவார் என்பதும் நாம் அறிந்த ஒன்று. 15/7/2023 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத வருத்தத்தை தெரிவித்தும் மேலும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார். நன்றி
கல்விக் கண் திறந்த காமராஜர் ஐயா பிறந்த நாளை முன்னிட்டு இந்திர அறக்கட்டளை மட்டும் அரைஸ் குழுவினர் இணைந்து நடத்திய ''இருளர் இன மக்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் ஓர் நாள்'' திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள நடுவக்கரை, சின்ன எடையாத்தூர், நடுவக்கரை,குடிபேரம்பாக்கம் ஆகிய மூன்று குட்கிராமங்களில் உள்ள 67 குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் பேக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில், நோட்புக்,பெண்,ஸ்கேல், ஜாமெட்ரி பாக்ஸ், மற்றும் 60 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி பைகளை வழங்கி, அவர்களுடன் மதிய உணவை அறுந்துவிட்டு, மேலும் அவர்களுடைய தேவைகளை கோரிக்கைகளாக பெற்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு பனையூர் பாபு அவர்களிடம் வழங்கப்பட உள்ளது, இந்நிகழ்வில் அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பஞ்சாயத்து தலைவர் திரு மனோஜ் அவர்கள் உடனே தண்ணீர் பம்பு அமைத்து தரப்படும் என்ற வாக்குறுதி அளித்தார். நன்றி🙏
Thanks for the humble invitation from Mr.Yuvaraj President Lions Club of Madhavaram Truck Terminal for "Installation of new office bearers & induction of new members". Had participated this event along with Sr.Adv.Mr.Nedunchezhiyan. Got some time to share a few words about Indira Charitable Trust "Arise of tribal" project. Wishing a new team members. God Bless!
குடிகார தந்தை ஒருபோதும் வேலைக்கு செல்வதில்லை. அம்மா கூலி தொழிலாளி, தன்னுடைய குறைந்த தினசரி ஊதியத்திலிருந்து, தற்போதுள்ள கடனுக்கான வட்டியை தினசரி அடிப்படையில்(Daily/Speed வட்டி) செலுத்துகிறார். இந்நிலையில் 11 ஆம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்று 12ஆம் வகுப்பு செல்லும் தன் மகளின் கல்வி கட்டணம் செலுத்த இயலாத குடும்பத்தை இந்திரா அறக்கட்டளை கண்டறிந்து, கல்விகட்டணத்தை செலுத்த காசோலையை நமது அறக்கட்டளை மூலம் வழங்கினோம், என்னுடன் முன்னாள் இராணுவ வீரர் ஹவில்தார் திரு செந்தில்குமார் அவர்கள். கல்வி கட்டணம் செலுத்துவது நிரந்தர தீர்வு அல்ல. மதுவுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் நன்றி
“Kind words can be short and easy to speak, but their echoes are truly endless.”- Mother Teresa
'அன்னை தெரேசா' அவர்களால் உருவாக்கப்பட்ட மிஷனரிஸ் ஆப் சேரிட்டி சென்னை இராயபுரத்தில் அமைந்துள்ள மனநலம் குன்றிய,காது கேட்கா, வாய் பேச இயலாத இல்லத்திற்கு 24-06-2023 அன்று சென்று அப்பிள்ளைகளுடன் ஒரு சில மணித்துளிகள் செலவிட்டு பின்பு அங்குள்ள 60 பிள்ளைகளுக்கும் சோப்பு,எண்ணெய், டூத் பேஸ்ட் & பிரஷ் இது போன்ற அத்தியாவசிய தேவைகளான 8 விதமான பொருட்களை நமது இந்திரா அறக்கட்டளை மூலம் வழங்கி, நானும் மற்றும் மூத்த வழக்கறிஞர் திரு.நெடுஞ்செழியன் அவர்கள், அண்ணன் திரு அன்புச்செழியன் அவர்கள் ஹவில்தார் திரு செந்தில்குமார் அவர்களும் மற்றும் நமது அறக்கட்டளை களப்பணியாளர்களான திரு.சித்தார்த்,திரு. சிவக்குமார்,திரு. நரேஷ் அவர்களும் இந்நிகழ்வில் பங்கு பெற்று, தன் வாழ்க்கையை மனித சேவைக்காக அர்பணித்துள்ள கன்னியாஸ்திரி சகோதரிகளிடம் பிரார்த்தனை செய்து ஆசி பெற்று வந்தோம். நன்றி
வறுமை ஒழிக்கும் மிகப்பெரிய ஆயுதம் கல்வி என நாங்கள் நம்புகின்றோம், எனவே அந்த ஆயுதம் அனைத்து பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கின்றோம். தன் பிள்ளைகளுக்கு எவ்வாறாவது ஒரு நல்ல கல்வியை கொடுத்துவிட்டு தன் குடும்பத்தின் வறுமை மாறாதா என தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் மிகு வறுமையில் உள்ள இக்குடும்பத்தினரை சந்தித்து அப்பெண்ணின் கல்லுரி கட்டணம் செலுத்த உதவி தொகையை நமது இந்திரா அறக்கட்டளை மூலம் கல்வி கட்டணத்திற்கான காசோலையை Rev. திரு.மார்ட்டின் J.பிலிப் ஐயா அவர்கள் வழங்கினார். என்னுடன் அண்ணன் திரு D.மைக்கேல் அவர்கள். நன்றி - புகைப்படம் எடுத்த சகோதரர் திரு.காட்வின் ரேக்ளாண்ட்
வாழ்க்கை நிச்சயமற்றதது என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக தன் கணவனுக்கு கை கால்கள் செயல் விழுந்து விட தன் இரு பிள்ளைகளின் பள்ளி கல்விக்கான கல்வி கட்டணத்தை இரு ஆண்டுகளாக செலுத்த இயலாமல், மேலும் சரியாக பள்ளிக்கும் செல்வதில்லை அக்குடும்பத்தாரை இன்று நாம் சந்தித்து எக்காரணம் கொண்டும் படிப்பை கைவிடக்கூடாது என்று அன்பாக நமது மூத்த ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு அன்புச்செழியன் அவர்கள் கடிந்து கொண்டு அப்பெண் பிள்ளையின் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை நமது அறக்கட்டளை மூலம் செலுத்த காசோலை வழங்கினோம், நன்றி
சமுதாயத்தை நேசிப்பவரால் மட்டுமே சமுதாயப் பணியே செய்ய இயலும்
தெய்வீக இறை பணியோடு சமுதாய பணியை சுமார் 176 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வரும் C.S.I கிறிஸ்து நாதர் ஆலயத்தின் மூலமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் வாலிபர் சங்கம் இணைந்து 18-06-2023 அன்று நடத்திய இரத்ததான முகாமிற்கு கலந்து கொள்ள நமது இந்திரா அறக்கட்டளைக்கு அழைப்பு இருந்ததால், அம்முகாமிற்கு நமது அறக்கட்டளையும் ஒரு சிறிய பொறுப்பை எடுத்துக்கொண்டு, நானும் நமது அறக்கட்டளை உறுப்பினர்களான முன்னாள் இராணுவ வீரர் ஹவில்தார்.திரு.செந்தில்குமார்,களப்பணியாளர் திரு.சுரேஷ்(MSW) அவர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து, Rev. திரு.மார்ட்டின் J.பிலிப் ஐயா அவர்களை சந்தித்து மரியாதை செய்து மேலும் இதே போன்று சமுதாய பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டோம்.
நன்றி
அண்ணன் திரு D.மைக்கேல் (செயலாளர்)
அண்ணன் திரு T.ஸ்வாமிதாஸ் (பொருளாளர்)
சகோதரர்கள் திரு D.வினோஷ் & திரு.காட்வின் ரேக்ளாண்ட்
உடல் நிலை சற்று பாதிக்கப்பட்டு, நல்ல முறையில் குணம் அடைந்து வரும் அன்பு தம்பியை அவனுடைய இல்லத்தில் சந்தித்து, மருத்துவம் மற்றும் கல்வி உதவி தொகையை நமது இந்திரா அறக்கட்டளை மூலம் வழங்கி , கணவனை இழந்தாலும் தன் பிள்ளைகளின் நலனுக்காக கடுமையாக உழைக்கும் அப்பெண்மணியிடம் இந்த வறுமை கூடிய விரைவில் மறையும் என நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்துவிட்டு வந்தோம். என்னுடன் நமது அறக்கட்டளை உறுப்பினர் திரு.அன்புச்செழியன் மற்றும் திரு.சுரேஷ் அவர்கள். நன்றி.
மே 20 2023 அன்று இந்திரா அறக்கட்டளை மற்றும் தக்ஷின் நிவாரன் நீயூரோதெரபி சென்டர் இணைந்து நடத்திய ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் ''மருந்தில்லாத மாற்று மருத்துவம்'' இலவச நீயூரோ தெரபி சிகிச்சை. இந்தியாவிலேயே மிகப் பழமையான சுமார் 240 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்குமே நியூரோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆதரவு இல்லாத அவர்களுக்கு நாம தானே ஆதரவு, நியூரோ தெரபி சிகிச்சை அளித்ததோடு மட்டுமில்லாமல், முதியோர்களுக்கு தேவையான உடை, உணவு மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களை வழங்கினோம். நமது அழைப்பை ஏற்று இம்முகாமிற்கு வருகை தந்த திரு K. செந்தில்குமார் அவர்கள் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி மூத்த வழக்கறிஞர் திரு. நெடுஞ்செழியன் அவர்கள் (Election Commission) மூத்த வழக்கறிஞர் திரு.தமிழினியன் வழக்கறிஞர் திரு. விக்ணேஷ் சட்ட ஆலோசகர் [கனரா வங்கி] திரு.கணேஷன் , N1-உதவி காவல் ஆய்வாளர் இராயபுரம் காவல் நிலையம் திரு.ஜான்சன், N1-உதவி காவல் ஆய்வாளர் இராயபுரம் காவல் நிலையம் திரு. இர.பு அன்பு செழியன் அவர்கள் கிழக்கு வடசென்னை மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சி திரு. முரளி நியூரோதெரபிஸ்ட் State Coordinator திரு. பெருமாள் நியூரோதெரபிஸ்ட் அனைத்து நியூரோதெரபிஸ்ட் மற்றும் நமது இந்திரா அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
குடி குடியை கெடுத்து விடுகிறது என்பதற்கோர் மேலும் ஒரு சம்பவம் தன் கணவனின் அதிக குடிப்பழக்கத்தின் காரணமாக தன் குடும்ப வாழ்க்கை விவாகரத்தில் போய் முடிவடைகிறது, பின்போ அவன் தன் மனைவிக்கு மற்றும் தன் மகளுக்கு உரிய பராமரிப்பு தொகையை கடந்த 9 வருடமாக கொடுப்பதே கிடையாது, வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இப்பெண்மணி பல வலிகளை தாங்கிக்கொண்டு தான் பெற்ற மகளுக்காக வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றாள் மற்றும் கடினமாக உழைக்கவும் ஆரம்பிக்கிறாள். இந்த (TASMAC)டாஸ்மாக் ஐ மட்டும் மூடிட்டா எத்தனையோ குடும்பம் நல்லா வாழ்வாங்க சார் என்று கண்ணீரோட தன் வாழ்வில் நடந்த வலிகளை எங்களோடு பகிர்ந்த இப்பெண்மணியிடம், நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்து இப்பெண்மணியின் பெண் பிள்ளைக்கு முழு கல்வி கட்டணத்தை நமது இந்திரா அறக்கட்டளை மூலம் வழங்கினோம். இப் பெண் பிள்ளையின் கல்விக்கு உதவிய குடும்பத்திற்கு மிக்க நன்றி, அக்குடும்பம் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற வல்ல இறைவனை வேண்டுகிறோம். என்னுடன் இந்திரா அறக்கட்டளை களப்பணியாளர் தோழர் திரு.சுரேஷ் அவர்கள்.
வாருங்கள் நண்பர்களே, நாம் ஒன்றிணைந்து வறுமை ஒழிப்போம். தன் கணவன் பிரிந்து சென்று பல வருடங்கள் கடந்தாலும், தன் தாய் உடல்நிலை சரி இல்லாதபோதிலும் எப்பாடு பட்டாவது தன் மகளுக்கு கல்வியை கொடுத்து விட போராடுகின்றாள், அதுவே அப்பெண்ணின் உயர்வுக்கும் வழிவகுக்கின்றது. நமது இந்திரா அறக்கட்டளையோடு இணைந்து ''பெண்ணுக்கு கல்வி கொடுங்கள்' என்ற ப்ராஜெக்ட்(Project) திட்டம் மூலம் முழு கல்வி உதவி தொகை வழங்கிய நன்கொடையாளர் குடும்பத்திற்கு மிக்க நன்றி. என்னுடன் நமது அறக்கட்டளை உறுப்பினர் நண்பர் திரு. சிவகுமார் அவர்கள்.
13/05/2023 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கு “பள்ளி/கல்லூரி புத்தகப் பை, பேனா, 3 நோட்டு, பென்சில், ரப்பர், ஷார்ப்னர், வாட்டர் பாட்டில், ஜாமென்ட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ்,தேர்வு எழுதும் மர பலகை, எழுது பலகை”, மற்றும் ஐந்து கிலோ அரிசி பை 30 மாற்று திறனாளி குடும்பத்திற்கு வழங்கும் நிகழ்விற்க்கு வருகை தந்த திரு K. செந்தில்குமார் அவர்கள் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி மூத்த வழக்கறிஞர் திரு. நெடுஞ்செழியன் அவர்கள் (Election Commission) திருமதி. சுஜா,T17காவல் துணை ஆய்வாளர் பெரும்பாக்கம் காவல் நிலையம் திரு ,டார்வின் மோசஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பெரும்பாக்கம்., திரு இர.பு அன்பு செழியன் அவர்கள் கிழக்கு வடசென்னை மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சி, திரு Dr சிவபாலன் அவர்கள் நிறுவனர் முறை மருத்துவம் பீ ஹெல்த் ஸ்டுடியோ பிசியோதெரபி மருத்துவர், மற்றும் சமுதாயத்தை மாற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சங்கம் மாநில அமைப்பு டிசம்பர் 3 இயக்கம் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நமது இந்திரா அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.🙏🏽
வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இருக்கும் வரை மனித நேயத்துடன் வாழ்வோமே. அது ஒரு அழகிய குடும்பம், கணவன் மனைவி மற்றும் இரு பிள்ளைகள், 2021 ஆம் ஆண்டின் இறுதியில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட தன் கணவன் மறித்த பின்பு, அக்குடும்பம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறது,கடந்த 15 மாதமாக தன் தகப்பனாருடைய இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த நினைவுகளில் இருந்து வெளிவர இயலாமல் கஷ்டப்படும் அப்பிள்ளைகளை பார்த்தோம். அந்தப் பெண்மணியோ தன்னுடைய இரு பிள்ளைகளை எவ்வாறாவது கடின பட்டாவது உழைத்து அவர்களை படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு எடுத்துக் கொண்டு வர பாடு படுகின்றார், ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் அவர்களை சந்தித்தோம் பண சூழ்நிலைமையின் காரணமாக ஒரு பெண் கல்லூரி மேல் படிப்பை தொடர இயலவில்லை, இன்னொரு பிள்ளைக்கு கல்வி கட்டணமே செலுத்தவில்லை, அக்குடும்பச் சூழ்நிலை நமது அறக்கட்டளைக்கு தெரிய வர, நமது இந்திரா அறக்கட்டளை சார்பாக அக்கல்லூரி கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கான காசோலையை வழங்கி, நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்து விட்டு வந்தோம், என்னுடன் நமது அறக்கட்டளை ஆதரவாளர் திரு.டேவிட் முருகேசன் அவர்கள்.
தாய் இறந்த பிறகு, தகப்பனும் தன் பிள்ளைகளை விட்டு சென்ற பின்பு, தன் பாட்டியிடம் வளரும் 9வது படிக்கும் வருங்கால கால்பந்தாட்ட வீரனை Oasis நண்பர்களுடன் சென்று சந்தித்து ஒரு சில நிமிடங்கள் செலவிட்டோம், மேலும் அவனுடைய பள்ளிக்கூட கட்டணத்தை செலுத்த இந்திரா அறக்கட்டளை மூலம் காசோலை வழங்கி, எக்காரணம் கொண்டும் படிப்பை கைவிட்டு விடக்கூடாது என்றும், மேலும் கால் பந்தாட்டத்தில் உயரம் தொட வாழ்த்தி விட்டு வந்தோம். தாய், தகப்பனை இல்லா பிள்ளைகளுக்கு நாம தானே அவர்களின் நல்ல உறவு என்ன நண்பா/பி?
13/04/2023 அன்று புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபரை கண்டு அக்குடும்பத்திற்கு உதவினோம், இதனை சமூக வலைதளத்தில் இட்ட பதிவை கண்டு, அந்நோயாளிக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மலம் வெளியேறும் மருத்துவ பை வாங்கி தர உதவ முன்வந்த நபருக்கும் மற்றும் அவரின் குடும்பத்திற்கு மிக நன்றி. நானும் மற்றும் திரு ஹவில்தார் திரு K.செந்தில் குமார்(Retired Indian Army) அவர்களும் அந்நோயாளியை சந்தித்து அந்த மருத்துவ பையை வழங்கினோம்.
அது ஒரு மிக அழகிய குடும்பம் இரு பிள்ளைகள் மகள் பதினொன்றாவது, மகன் ஏழாவது படிக்கின்றார்கள், தன் காதல் கணவன் வயிறு வலியால் துடித்ததால், மருத்துவ சோதனை செய்த பின்பு அது குடல் புற்றுநோய் என தெரியவர, அக்குடும்பம் மிகுந்த வேதனை படுகின்றது, நம்பிக்கை இழக்காமல் தங்கள் மனதை திடப் படுத்திக்கொண்டு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, தன் கணவன் மற்றும் இரு பிள்ளைகளுக்காக அப்பெண் உழைத்து பாடுபடுகின்றாள். அக்குடும்பத்தை நானும் மற்றும் திரு ஹவில்தார் திரு K.செந்தில் குமார்(Retired Indian Army) அவர்களும் சந்தித்து, நமது இந்திரா அறக்கட்டளை மூலம் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினோம். தன்னுடைய கணவரின் மலம் வெளியேற்றும் பை இரு நாளைக்கு ஒன்று மாற்ற வேண்டும், ஒரு பை சுமார் ரூபாய்.248 வருகிறது, தன்னுடைய சம்பளத்தில் பெரும்பாலும் தன் கணவருக்காக செலவு செய்கின்றேன் என கூறியவளின் கண்களில் மிகுந்த கண்ணீர். அந்த வலி மிகுந்த வார்த்தைகளை கேட்ட பின்பு, உங்களுடைய தேவையை சந்திக்க நமது அறக்கட்டளை மூலம் யாரேனும் முன் வருவார்கள் என்கின்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்து விட்டு வந்தோம்.
இருளர் இன பழங்குடியின பிள்ளைகளின் கல்விக்காக give.do என்கின்ற நிறுவனத்தின் உதவியால் நிதி திரட்டும் ஆன்லைன் பிரச்சாரம் நடைபெற்று கொண்டு இருக்கின்றது, ஒருவேளை நீங்களும் பங்கு பெற முன்வந்தால் மேலே கொடுக்கப்பெற்றுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
Donation for Education - https://give.do/projects/arise-of-tribal
An online campaign is going on to raise funds for the education of Tribal Irular children with the help of give.do, if you want to participate click on the given link above.
மாற்று திறனாளிகளின் கூட்டமைப்பு மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தில் சார்பாக ஒழுங்கு செய்ய பெற்ற கூட்டத்தில் பங்கு பெற அழைப்பே ஏற்றுக்கொண்டு, இன்று 26-02-2023 மாலை 4:30 மணிக்கு செம்மஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் நமது இந்திரா அறக்கட்டளை சார்பில் நான், நமது மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் திரு.அன்புச்செழியன் அவர்கள், திரு.சித்தார்த், மற்றும் தோழர்கள்/சகோதர்கள் திரு.முத்து அவர்கள், திரு.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு 'வறுமை ஒழிப்பு' என்கின்ற தலைப்பில் சிறிய உரையாற்றி, அவர்களின் மிகுந்த வலிமிகுந்த கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு, வருகின்ற கல்வி ஆண்டில் அவர்களின் பெண் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவுகின்றோம் என்கின்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்து விட்டு வந்தோம். ஒருவேளை நீங்களும் எங்களோடு கைகோர்க்க விரும்பினால் விண்ணப்பத்தை https://forms.gle/EeHjPvobuuhbpw7V9 பூர்த்தி செய்யுங்கள், வாருங்கள் மாற்று திறனாளிகளின் பெண்பிள்ளைகளின் கல்விக்காக நாம் இணைந்து செயல்படுவோம். நன்றி திரு. மான் குமார் மற்றும் அவரது குழுவினர்கள்
'குழந்தை பாலியல் தொழிலார்கள் ஒரு இரவுக்கு சுமார் 8 நபர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டுமாம்' ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் கணக்கெடுப்பின்படி வெளி வந்த தகவல். ஆனால் இன்றோ அது அதிகரித்திருக்க கூடும் என்கின்ற அச்சம் எழுகின்றது, என்ற மிகுந்த வேதனையான வார்த்தைகளை திருமதி கிரிஜா குமார்பாபு (Secretary of Indian Council for Child Welfare Member in Juvenile Justice Board) மற்றும் பெண்களின் நலனுக்காக தமிழக அரசால் அவ்வையார் விருது வழங்கப்பட்ட அந்த அம்மையார் சொன்னதும் எங்கள் உள்ளங்கள் உடைந்தது. மேலும் இது போன்று பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். எவ்வாறு இதனை தடுக்க போகின்றோம் என்கின்ற கேள்விகளோடும், அதற்கான விடைகளோடும் வெளியேறினோம். இதனை அடியோடு ஒழிக்க வேண்டுமானால் முதலாவது குழந்தை சீண்டல்/துஷ்பிரயோகம் நம்மிடம் ஒழிய வேண்டும். இச்சையை தணிக்க குழந்தைகளை பலிக்கடாக்கி, நச்சை விதைத்து விடாதீர்கள். சமூக நீதி(Social Justice) தினத்தை முன்னிட்டு 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்க' என்கின்ற தலைப்பில் Oasis India வால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மன்ற கூட்டத்தில்' முப்பத்துக்குக்ம் மேற்பட்ட அறக்கட்டளை நிறுவனர்கள்/நிர்வாகிகள் கலந்து கொண்டனர், அதில் நமது இந்திரா அறக்கட்டளை சார்பில் நானும் கலந்து கொண்டேன்.
Thanks Zoho Zoho Corporation for forming 'Zoho Community'. Undoubtedly, ZUG(Zoho Users Group) connects young CTO's/Startup's/Entrepreneur's/Etc. I had participated in this meetup as a Managing Trustee of Indira Charitable Trust. Also, I had a great time catching up with some new people. Hats off to Zoho Founder Mr. Sridhar Vembu. We pray & wish him success in all his tryings.
'Zoho சமூகத்தை' உருவாக்கிய Zoho கார்ப்பரேஷனுக்கு நன்றி. சந்தேகத்திற்கு இடமின்றி, ZUG இளம் CTO's/Startup's/Entrepreneur's/etc.. க்களை இணைக்கிறது. இந்திரா அறக்கட்டளையின் நிர்வாகியாக நான் இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். மேலும், சில புதிய நபர்களுடன் பழகுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. Zoho நிறுவனர் திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு வாழ்த்துகள். அவருடைய எல்லா முயற்சிகளிலும் வெற்றிபெற பிரார்த்திக்கிறோம்
Leaders not born but made
Had a blessed day with a blessed people at Lead Talks show 2023 LeadTalks. The talk show was organised nicely.
Thanks for selecting us to participate in this show. On behalf of our NGO, I participated and got a wonderful living experience.
kudos to Mr.Joshua Rajiv Chelladurai Page and his team members Dr. Benny Prasad God Bless
தலைவர்கள் பிறக்கவில்லை ஆனால் உருவாக்கபடுகின்றனர்.
லீட்ஸ் டாக் 2023 ஷோவில் ஆசிர்வதிக்கப்பட்ட நபர்களுடன் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாள். பேச்சு நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நமது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பங்கேற்று அற்புதமான வாழ்க்கை அனுபவத்தைப் பெற்றுக்கொண்டோம்.
திரு.ஜோசுவா மற்றும் அவரது குழு உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். கடவுள் ஆசீர்வதிப்பாராக
வறுமை மற்றும் அதன் வலியும் மிக கொடுமையானது. கணவரை இழந்தவர், இரண்டாம் மகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர், முதல் மகனோ தினசரி கூலி வேலை செய்பவர், தற்சமயம் அவருக்கு சரியான வேலை இல்லை, மூவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பெண்மணி கர்ப்பப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்ய ஸ்கேன்(Scan) எடுக்க பணம் இல்லாததால் ஒரு சில நாட்களை வலி மற்றும் வேதனையுடன் கடத்துகின்றார், இத்தகவல் நமது இந்திரா அறக்கட்டளைக்கு தெரியவர அரசு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன்/scan எடுக்க பணம் செலுத்தி, சில ஊட்டச்சத்து பொருட்களை கொடுத்து நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்து விட்டு வந்தோம். உடன் தம்பி கவிஞர் திரு சரவணன் Kavignar Saravanan(சரவணன் அவர்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பாடல்களை எழுதியவர்) உள் நோயாளிகளுக்கு இலவச ஸ்கேன்(scan) எடுக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் M. K. Stalin, வறுமை ஒழிப்பு அமைச்சர் Udhayanidhi Stalin மற்றும் சுகாதார அமைச்சர் Ma Subramanian அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றோம்.
இக்கட்டான சுழ்நிலையில் மட்டுமே உண்மையான உறவுகள் மற்றும் நண்பர்களை இனம் காண முடியும். ஒரு சில பழங்குடியின மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கும் பொழுது அறக்கட்டளைகள் அவர்களுடன் துணை நின்று அவர்கள் ஏந்த வகையிலும் பாதிப்பு அடையா பல முயற்சிகளை முன்னிறுத்தி உதவிகள், விழிப்புணர்வு முகாம்களை நடத்தி நம்மை போன்று அன்றாட மனித வாழ்கை வாழ தொடர் கண்காணிப்புகளை முன்னெடுக்கின்றனர். அந்தவகையில், நமது இந்திரா அறக்கட்டளை கோரிக்கைகளை ஏற்று கொண்டு நம்முடன் இணைந்து உதவ சில அரசு அதிகாரிகள் முன்வந்து அம்மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை மாற்றி அரசு மீதும் அரசு அதிகாரிகள் மீதும் மிகுந்த மரியாதை ஏற்படுத்தி செல்லுவார்கள், அவர்களே நமது அறக்கட்டளைக்கு உண்மையான உறவாகவும் நண்பர்களாகவும் மாறிவிடுவர். அந்த வகையான ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
சமத்துவ நாயகன் என நெல்லை மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மச்சான் திரு. புல்லட் ராஜா அவர்களை சந்தித்து அவருடைய 50 வது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு, விழாவிற்கு வர இயலாத வருத்தத்தையும் தெரிவித்து கொண்டு, சமத்துவம் படைக்க தொடர்ந்து முன்னேற வேண்டும் என நமது இந்திரா அறக்கட்டளை மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.
Wish You Many More Happy returns of the day, God Bless.
12-01-2023 அன்று, தவிர்க்க முடியாத அவசரநிலை காரணமாக, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டேன், சில அரசு அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. இருப்பினும், 11-01-2023 அன்று சில அதிகாரிகளைச் சந்தித்து, பழங்குடியின கிராம மக்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். நீதிபதி கோபால் சிங் & ஜஸ்டிஸ் ஷிவ் நாராயணின் அமைப்பு, துணைத் தலைவர் ரிட்டெட் மேஜர் ஓஎம் பிரக்ஷ் கல்ராவின் நேரம் மற்றும் சமூகத்திற்கான அனுபவத்தினை பகிர்ந்தமைக்கு சிறப்பு நன்றி.🙏🏼 இந்திய உச்சநீதிமன்றத்தில் பயிற்சி செய்து வரும் சில மூத்த சகோதரர்களை நேரில் சந்திக்காததற்கு மன்னிக்கவும். என்னுடைய அவசர நிலைமையை புரிந்தமைக்காக நன்றி.🙏🏼 விரைவில் அந்தந்த துறை அமைச்சகத்துடன் நியமனம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மூன்று தலைமுறைகளாக, சுமார் 42 குடும்பங்கள் குறைந்தபட்சம் 100 பேர், சடையான்குப்பம் குளத்தருகில் வாழும் இருளர் இன மக்களை இன்று சந்தித்து, 'நிர்வாணத்திற்கு ஆடை' என்ற திட்டத்தின் மூலம் பெறப்பெற்ற பழைய மற்றும் புதிய துணிகளை வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்க்காக நமது இந்திரா அறக்கட்டளை மூலம் சின்ன சிறிய முயற்சிகள் எடுக்கப்படும் என கூறிவிட்டு வந்தேன். புழுக்களை விற்று, மீன், நண்டு, மற்றும் இறால் விற்று அன்றாட வாழ்க்கையை கஷ்டத்துடன் நகர்த்தி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் அருகில்லுள்ள, கல்பாக்கத்திலிருந்து 18 km தொலைவிலுள்ள 'சின்ன இடையாத்தூர்' என்கின்ற குட்கிராமத்தில் 25 இருளர் இன குடும்பமாக சுமார் 100 பேர் வசித்து வருகின்றனர்.
வெளியுலகம் தொடர்பில்லாமல் இருக்கும் இருளர் இன மக்களை, 2015 ஆம் ஆண்டு Arise Society (MSW படித்த பெண்களால் உருவாக்கப்பட்ட NGO) அம்மக்களின் இடத்தை கண்டறிந்து, கல்வி சேவை செய்ய டுய்சன் சென்டர் (Tuition Center) அமைத்து, அம்மக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தமிழக முதலமைச்சர் ஆதரவோடு சிறிய பேரூந்து, சாலை அமைத்து கொடுத்து, மற்றும் ஆதார், ரேஷன், வோட்டர் ஐடி, சாதி சான்றிதல் மேலும் அவர்களுக்கு பட்டா கிடைக்க தொடர்ந்து முயற்சி செய்யும் அக்குழுவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
24/12/2022 மாலை 5 மணிக்கு, Arise Society இம்மக்களின் குழந்தைகளுக்காக ஏற்படுத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நானும் பங்குபெற்று நமது இந்திரா அறக்கட்டளை சார்பில் 5 கிலோ அரிசி பை மற்றும் Arise Society சார்பில் பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.
குறிப்பு:
மழை பெய்யும் பொழுது ஊராட்சி சேவை மையம் தான் இவர்களுது வீடு. இம்மக்களை சந்திக்க மூன்று பாதைகள் உள்ளது. முதல் வழியில் பாலம் உடைப்பட்டுள்ளது, இரண்டாவது வழியில் தற்சமயம் செல்லவே முடியாது. மூன்றாவது வழி ஓரளவிற்கு உள்ளது.
Thanks 'Round Table India' Round Table India Ladies Circle Ladies Circle India team for arranging the wonderful Christmas celebration for a very poor/street living/orphanage children at Forum Vijaya Mall Chennai The Forum Vijaya Mall. Thanks for your humble invitation, Indira Charitable Trust were part of transport coordination, and via our trust supporters 150 kids participated in this event.
Special Thanks to
1) Karunalaya Social Service Society
2) Oasis India Staff
3) Manidham Potruvom leads & Coordinators
4) Kovalam Govt. School
சென்னை ஃபோரம் விஜயா மாலில் மிகவும் ஏழ்மையான, தெருவில் வாழும், மற்றும் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கான அற்புதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த ரவுண்ட் டேபிள் இந்தியாவின் லேடீஸ் சர்க்கிள் குழுவினருக்கு நன்றி. இந்திரா அறக்கட்டளை போக்குவரத்து ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக இருந்தது, எங்கள் அறக்கட்டளை ஆதரவாளர்கள் மூலம் 150 குழந்தைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.
சிறப்பு நன்றி
1) கருணாலயா சமூக சேவை சங்கம்
2) ஒயாசிஸ் இந்தியா ஊழியர்கள்
3) மனிதம் போற்றுவோம் தலைமை மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
4) கோவளம் அரசு பள்ளி
என்னுடைய பாலிய நண்பரும் வழக்கறிஞருமான திரு.கார்த்திக் நாராயணன் Karthik Narayanan Narayanan Karthik அவர்களின் தந்தையும், தமிழக அரசால் பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சமத்துவ மக்கள் கழகம் தலைவர் திரு.எர்ணாவூர் நாராயணன் EX.MLA அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, பனை விதைகளை நடும் பணியினையும் மற்றும் அதற்கான விழிப்புணர்வு முகாம்களை தமிழக அரசானது அறக்கட்டளைகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நமது இந்திரா அறக்கட்டளை Ruban Ponraj R மூலம் வைத்து, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றும் பகிர்ந்தும் கொண்டேன். உடன் சமத்துவ மக்கள் கழகம் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.பாஸ்கர் @baskar.lord அவர்கள்.
வேலை ஸ்தலத்தில் தன் கையை இழந்தாலும் நம்பிக்கையை அஸ்திபாரமாக்கி, விபத்தில் இருந்து மீண்டு வரும் பலருக்கு நம்பிக்கை நாயகனாக திகழும் அன்பு சகோதரர் திரு.தமீம் அன்சாரி அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து, சமீபத்தில் நடந்த சுமார் 1250 கிலோ மீட்டர் சைக்கிள் பந்தயத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக நமது இந்திரா அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றோம். பாரா ஒலிம்பிக்கிற்காக (Paralympics) தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கும் இந்த ஏழை வீரனுக்கு தமிழக அரசு M. K. Stalin Public Distribution System - Government of Tamilnadu உதவ வேண்டும், மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் Udhayanidhi Stalin அவர்கள் கண்டிப்பாக உதவ வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைக்கின்றோம்.
விடிந்தால் முதுமை என்பதை ஏற்காமல் இருக்கவே முடியாது, ஆனால் முதுமையை எவ்வாறு கழிக்கப் போகிறோம் என்பதை ஆண்டவன் தான் அறிவார்
சொந்தங்களின் இழப்பு, கைவிடல், தொழிலில் நஷ்டம், நம்பிக்கை துரோகம், கடன், நோய், ஏமாற்றம், மன உளைச்சல், வியாதி மற்றும் வேறு சில காரணங்களால் உடைந்த உள்ளங்களை இன்று சந்தித்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு 45(23 பாட்டி, 22 தாத்தா) முதியோருக்கு புத்தாடை, தேங்காய் எண்ணெய், குளியல் மற்றும் துவைக்கும் சோப்பு, மற்றும் வேறு சில உணவு பொருட்களையும் நமது இந்திரா அறக்கட்டளை சார்பில் மூத்த ஆலோசகர் திரு.அன்புசெழியன் அவர்கள் தலைமயில் வழங்கினோம்.
நமது அறக்கட்டளை அழைப்பை ஏற்று தங்களுடைய அலுவல் மத்தியில் கட்சி பாகுபாடு இன்றி கலந்து கொண்ட நண்பர்கள், அண்ணன் மற்றும் சகோதரிகளுக்கு மிக்க நன்றி.
இதனை படிக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள ஆதரவற்ற மக்களை மறந்துவிடாதீர்கள்.
இடம்: இராயபுரம், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி அருகில், 236 ஆண்டுகளுக்கு முன்பாக 'மோனேகர் மற்றும் வேங்கடகிரி ராஜா' அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவிலேயே மிகப் பழமையான முதியோர் இல்லம்.
நாள்: 15-12-2022
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் MLA திரு.SS.பாலாஜி அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள். ஒரு சில மாதங்களாக தீர்க்கப்படாத சில கோரிக்கை/பிரச்சினைகளை அவரது கவனத்திற்கு எடுத்து சென்று அதனை தீர்க்க உதவிய நமது இந்திரா அறக்கட்டளை மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் திரு.அன்புசெழியன் அவர்களுக்கும் நன்றி. MLA அவர்களும் நமது அறக்கட்டளை மூலம் நடைபெறும் சேவைகளை கேட்டறிந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
நமது எண்ணங்களின் தான் ஊனம்
எனது உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும் எண்ணங்கள் எளியோர்க்காக ஓடச்செய்கின்றது, அழைப்பின் நிமித்தமாக சற்று தாமதமாக சென்றோம், சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் பங்குபெற்று பயனடைந்தனர். நமது அறக்கட்டளையின் சிறிய முயற்சியால் சிலர் இம்முகாமில் கலந்துகொண்டனர்.
பின்வரும் நபர்களின் வாழ்கை நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றது.
1) 2021 ஆம் ஆண்டு விபத்தில் தன் வலது கரத்தை இழந்தவர்
2) பொறியாளர் கால்
3) பாரா ஒலிம்பிக்கிற்காக (Paralympic) தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கும் வலது கரம் இழந்த சைக்கிள் ஓட்டும் வீரர்.
செயற்கை கால் கிடைத்து அவர்கள் நடக்கும் போது அவர்களின் முகங்களின் கண்ட சந்தோஷம் கல்லானா இருதயத்தையும் கரையச்செய்தது. வார்த்தைகளால் சொல்ல இயலாது உணரமட்டுமே முடியும்.
நல்ல நிலையில் உள்ள நாம் மாற்றுத்திறனாளிகளை ஒருபோதும் மறந்து விட கூடாது.
நன்றி
Round Table of India, Ladies Circle, BEE Physio life, December 3, TN Government, and all other organizations.
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது என்று கிறிஸ்தவ பைபிள் கூறுகிறது, ஏழை மீனவ மக்களின் கண் பார்வையை பரிசோதித்து/குறைபாட்டை கண்டறிந்து அவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இந்திரா அறக்கட்டளை சார்பாக நானும் மற்றும் ஹவில்தார் Havildar திரு K. செந்தில் குமார் அவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டோம்.
நன்றி இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் India Vision Institute, உதவும் உள்ளம் சமூக நல சங்க பொது செயலாளர் திரு இரா.சகாயநாதன், மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை பணியாளர் சங்க துணைத் தலைவர் மோ.சதீஷ்குமார்
இடம்: வடசென்னை மீனவ கிராம ஐக்கிய சபை
தேதி: 29-10-2022
கருணாலயா சோஷியல் சர்வீஸ் சொசைட்டியில் Karunalaya தீபாவளி கொண்டாட்டத்திற்காக லேடீஸ் சர்க்கிள் இந்தியா Ladies Circle India (வட்டமேசை இந்தியாவின் ஒரு பகுதி) இருந்து பணிவான அழைப்புக்கு நன்றி. நமது இந்திரா அறக்கட்டளையின் ஆலோசனை குழு உறுப்பினர் நண்பர் சித்து மற்றும் விஜே.கோபி (கலைஞர்) உடன் கலந்துகொண்டேன்🙏 இந்திரா அறக்கட்டளையானது, 'லேடீஸ் சர்க்கிள் இந்தியா' ஒவ்வொரு குழு உறுப்பினர்களும் சமுதாய வளர்ச்சியை நோக்கிய படிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறது. சிறப்பு நன்றிகள் JK Kohli & Zehra
Thanks for the humble invitation from Ladies Circle India Ladies Circle India (Part of Round Table India) for their Diwali celebration in Karunalaya Karunalaya Social Service Society. Participated with our Indira Charitable Trust Advising Committee Member Buddy siddhu & VJ Gopi (Artist) Indira Charitable Trust wishing 'Ladies Circle India' team members for getting a success on their each and every steps toward society growth Special Thanks to JK Kohli & Zehra 🙏
Thanks for the humble invitation from Oasis India OASIS, proud to share that I have participated in this event on behalf of our NGO. The Movement Continuously we should fight against human trafficking. OASIS இன் தாழ்மையான அழைப்புக்கு நன்றி, எங்கள் NGO சார்பாக நான் இந்த நிகழ்வில் பங்கேற்றேன் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். மனித கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும்.
வலி வலியின்றி வாழ வழி செய்கிறது
சங்கமித்ரா அறக்கட்டளையின் அறங்காவலர்களுடன் ஒரு அற்புதமான சந்திப்பு நடத்தினோம். அவர்களிடமிருந்து ஆசி பெறுவதற்காக அவர்களின் பாதங்களைத் தொடுவதில் தவறில்லை. அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பு/ஆட்டிசம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர்கள் எடுத்து வரும் படிகளுக்கு எங்கள் தலை வணங்குகிறோம்.
அவர்களுக்கு நமது கைகளைக் கொடுத்ததற்காக ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருகின்றோம்.
நமது NGO ஆலோசனைக் குழு உறுப்பினர்&நண்பர் சித்து அவர்களுக்கு சிறப்பு நன்றி.
மேலும் தகவலுக்கு பார்வையிடவும் http://www.sangamitrafoundation.com
Pain makes the way to live without pain
We had a wonderful meeting with the trustees of the Sangamitra Foundation. No wrong with touching their feet for getting a blessing from them. Bow down our heads for their sacrifice, dedication, and the steps that they are taking forward to the special/autism kids' future.
Feel blessed for lending our hands to them.
Special thanks to our NGO advising committee member & buddy Siddhu.
For more info visit - http://www.sangamitrafoundation.com
நம்முடைய மகுடத்தில் மேலும் ஒரு இறகு கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் CSR (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) பதிவு செய்துள்ளோம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஹாய் கார்ப்பரேட் நண்பர்களே, நாங்கள் இருக்கிறோம்! ஏழை/தாழ்த்தப்பட்ட மக்களுக்கான திட்ட முன்மொழிவுகளை விரைவில் கொண்டு வருவோம். ஐசிடி குழுவிற்கு திருமதி. பிரேமாவை வரவேற்கிறோம். கார்ப்பரேட்டுகள் தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளையும் அவர்கள் கவனித்துக் கொள்ளப் போகிறார்கள். நன்றி!
[email protected] Yet another feather in our crown It's our pleasure to share with you all that we have done with the registration of CSR(Corporate Social Responsibility) with the ‘Ministry of Corporate Affairs’. Hey Corporate Guys, we are there! Soon we will come up with project proposals for poor/downtrodden people. We welcome Mrs. Prema to the ICT team. She is going to take care of all the communications with respect to corporate. Thanks! [email protected]
யாராக இருப்பினும் எந்தவித நிராகரிப்பை ஒருவராலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, நிராகரிப்புகள் மிகுந்த வலியை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நிராகரிக்கப்பட்டவர்களில் சிலர் அந்த வலியை வழிகளாக மாற்றிக்கொண்டு வாழ்வில் வெற்றியடைகின்றனர். அவ்வாராகவே தன் தாய் இல்லாமல் வளர்ந்த இப்பெண் தன் கணவனின் திருமணத்தை தாண்டிய தகாத உறவால் இப்பெண்ணின் திருமண வாழ்வில் நடந்த நிராகரிப்பு மிகுந்த வேதனையைக் கொண்டு வந்தது, இருப்பினும் தன்னை பலப்படுத்திக்கொண்டு அரசாங்க 'Child Help' இல் தன்னை இணைத்துக்கொண்டு வேலை செய்து தன் குழந்தையை காப்பாற்ற பாடுபடுகிறார். இந்நிலையில் H8 திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய பெண் காவல் அதிகாரிகள் நம்முடைய அறக்கட்டளையை அறிமுகப்படுத்தி தொடர்பு கொண்டதனால் அப்பெண்ணின் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை வழங்கி நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்தோம்.
அது ஒரு அழகான குடும்பம், ஆம்! அது ஒரு காதல் திருமணம். பெண் கிறிஸ்துவப் பின்னணியைச் சேர்ந்தவள், கணவனோ பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இருவரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றி வந்தனர். வழக்கம் போல், இரு தரப்பிலிருந்தும் குடும்ப ஆதரவு இல்லை. இருப்பினும், அவர்கள் ஒரு அழகான குடும்பத்தை நடத்தி வந்தனர். ஆண் குழந்தை பிறந்ததும் அப்பெண்ணோ வேலையை ராஜினாமா செய்துள்ளார். கடின உழைப்பால், கடன் வாங்கி புத்தம் புதிய பிளாட் வீடு வாங்கினார்கள். தடையின்றி எல்லாம் நல்லபடியாக நடந்தது. ஒரு நாள் காலை அவரது கணவர் தனது அலுவலக கூட்டங்களை முடித்தவுடன், திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக இறந்துவிடுகிறார். உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது இந்த சம்பவம். தனது அன்புக்குரியவரை இழந்த பிறகு வங்கி/நிதி நிறுவனத்தில் இருந்து கடன் வசூலிப்பவர்களை எப்படி எதிர்கொள்வது என்று அப்பெண்ணுக்கு தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையின் மத்தியில், அவரது நண்பர் நமது NGO வை அறிமுகப்படுத்தியுள்ளார், மேலும் நமது குழு அப்பெண்மணிக்கு அனைத்து ஆவணங்களையும் (போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, காப்பீட்டு ஆவணம், கடன் ஆவணம் போன்றவை...) மற்றும் பணப் பலன்களைப் பெற சட்டரீதியாக அப்பெண்ணுடன் துணை நின்றது. நண்பர்களே, எப்பொழுதும், இதனை உங்கள் மனதில் வையுங்கள், உங்களுக்கு குடும்பம் உள்ளது, குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் சில நிதிப் பொறுப்புகள் உள்ளன, எனவே உங்கள் உடலின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கு பொறுப்பாக இருங்கள்.
சற்று ஓய்வு நேரம் கிடைத்ததால், திருவள்ளூர் மாவட்டம் புதூர் கிராமத்தில் சில 'இருளர் சமூகக் குடும்பங்களுக்கு' சென்று பழைய/புதிய ஆடைகளை ஒப்படைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி சில ஆரோக்கியமான உரையாடல்களைக் கொண்டிருந்தேன், வறுமை அவர்களுடன் மிக மோசமான பாத்திரத்தை வகிக்கிறது என்பதை உணர்ந்தேன். சரியான வேலை இல்லை, பட்டா இல்லா வீடுகள், எல்லாரும் ஒரே மாதிரியான வார்த்தையைப் பகிர்ந்து கொண்டனர், கனமழை வந்தால், அதை எப்படிக் கடப்பது என்று தெரியவில்லை. அவ்வளவு வேதனையான வார்த்தைகள்.
Got some leisure time, so got a chance to visit some 'Irular Community Families' at Tiruvallur district Budur village and handed over some old/new clothes. Had some healthy conversations about their lifestyle, and I felt that poverty plays the worst role with them. No proper job, No Patta homes, all shared the same word, if heavy rain comes, do not know how to cross it. Such a painful word.
'நிர்வாணத்திற்கு ஆடை' என்ற திட்டத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு, நன்கொடையாளரிடமிருந்து 4 பைகளில் நிறைய ஆடைகளை (பழைய/புதிய) பெற்றோம். மேலும், இது விரைவில் தேவைப்படுவோரிடம் ஒப்படைக்கப்படும்.
நண்பர்களே, இந்த திட்டத்தில் சேரக்கூடிய MSW (மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க்) மாணவர்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், தயவுசெய்து உங்கள் விண்ணப்பத்தை [email protected] உடன் பகிரவும் அல்லது 9790833859 என்ற எண்ணில் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
After passing the resolution for the project 'Clothing to the Naked'., we received a full of clothes(old/new) in 4 bags from the donor. And, soon this will be handed over to the needy one.
Guys, we are looking forward to the MSW (Master of Social Work) students, who can join this project, kindly share your resume with [email protected] or else connect with us at 9790833859
Thanks
மகிழ்ச்சி மற்றும் கவலை எதுவும் நிரந்தரம் இல்லை அழகிய குடும்பம் திடீரென கணவருக்கு மூளை பாதிப்படைய (Brain Stroke) நிலைகுலைகின்றாள் இப்பெண். கோமா நிலையை அடைந்ததால், கணவருக்கு இனி எல்லாமே இருந்த இடத்திலுருந்து தான். ஒருபுறம் கணவன் வாங்கிய கடனுக்காக இவள் பதில் கூற வேண்டும், மறுபுறம் வீட்டு வாடகை, இதை அனைத்தையும் தாண்டி தான் பெற்ற பிள்ளை படிப்பை பாதியில் விட்டுவிடக்கூடாது என்று வேலைக்கு ஓடுகின்றாள். நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சு சார் என்கின்ற வேதனை நிறைந்த குரலோடு தன் பிள்ளை படிப்பிற்காக உதவுங்கள் என்று அழைத்த தொலைபேசி கேட்டு, அப்பள்ளி கூடம் சென்று பள்ளி முதல்வரை சந்தித்து பள்ளிக்கட்டணத்தை சற்று குறையுங்கள் என கோரிக்கை வைத்தோம். அவரோ முடியவே முடியாது என்று துரத்தி விடாத குறை! பின்பு 9வது படிக்கும் அப்பிள்ளையின் கல்வி கட்டணத்தில் 50% செலுத்தி, இனி வரும் காலங்களில் தமிழக அரசு பள்ளிக்கூடத்தில் சேருங்கள் என நம்பிக்கை வார்த்தைகளை கூறி விட்டு வந்தோம்.
Thanks for the humble invitation from the Principal of Sri Venkateswara College and Technology Dr. Manohar. And it's our pleasure to share with you all that our NGO has started working with them on 'Education for All'.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மற்றும் தொழில்நுட்பத்தின் முதல்வர் டாக்டர் மனோகர் அவர்களின் பணிவான அழைப்புக்கு நன்றி. நமது தன்னார்வ தொண்டு நிறுவனம் அவர்களுடன் இணைந்து 'அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தில் பணியாற்றத் தொடங்கியதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்று பிறந்தநாள் காணும் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் (MLA) திரு ஐட்ரிம்ஸ் மூர்த்தி அவர்களுக்கு நமது இந்திரா அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளை மற்றும் இளைஞர்களே நன்கு உக்கவிப்பவர். அவரை சந்திக்கும் தருணங்களில் நமது அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கும் ஒவ்வொரு பணிகளையும் கேட்டு அறிந்து, எப்போதும் நல்ல ஆலோசனை கூறுவார். வாழ்வில் எல்லா நன்மைகளும் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். உடன் Retd.sub collector திரு. மாரியப்பன் அவர்கள், நன்றி!
திட்டம் - 'நிர்வாணத்திற்கு ஆடை'
சில மாதங்களுக்கு முன், டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க எங்கள் அறக்கட்டளைக்கு அழைப்பு வந்தது. வேறு சில காரணங்களால் கடைசி நிமிடத்தில், அந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அதற்காக வருந்துகிறோம்.
ஆனால், இன்று MSW இறுதியாண்டு மாணவர்களைச் சந்தித்தேன். நமது NGO 'இந்திரா அறக்கட்டளை' திட்டம் 'நிர்வாணத்திற்கு ஆடை' பற்றிய ஒரு சிறந்த அமர்வு நடைபெற்றது. நமது சமூகத்தைப் பற்றிய சில தொழில்சார் கருத்துக்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். விரைவில் எம்.எஸ்.டபிள்யூ மாணவர்களுடன் இணைந்து இந்த திட்டத்தை தொடங்க உள்ளோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
MSW துறை பேராசிரியர்களுக்கு எங்கள் சிறப்பு நன்றி.
Project - 'Clothing to the Naked'
A few months back, our trust got the invitation to participate in an event at Dr. Ambedkar Government Art college. Due to some other schedule at the last minute, could not turn up to the event. We regret that.
But, today I met MSW final year students. It was a great session about our NGO 'Indira Charitable Trust' project 'Clothing to the Naked'. Students shared some professional ideas about our society. It's our pleasure to share that soon we are going to launch the project along with MSW students.
Our special thanks to the MSW Department Professors.
இன்று நான் நாளை நீ!
சுமார் 236 ஆண்டுகளுக்கு முன்பாக 'மோனேகர் மற்றும் வேங்கடகிரி ராஜா' அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவிலேயே மிகப் பழமையான முதியோர் இல்லத்தை நமது இந்திரா அறக்கட்டளை சார்பில் சந்தித்து, அவர்களின் இன்னல்களை கேட்டறிந்து மழைக் காலம் நெருங்கி வருவதால் 'பசித்தோர்களுக்கு உணவு' (‘Food for the Hungry’) என்கின்ற நமது அறக்கட்டளையின் திட்டத்தின் (Project) மூலம் அவர்களுக்குத் தேவையான அரிசி மூட்டைகளை வழங்கினோம்.
இடம் - பாரிஸ்/ஸ்டான்லி மருத்துவமனை
அறக்கட்டளை நிறுவனர் திரு ரூபன் உடன் நமது அறக்கட்டளை ஆலோசகர் திரு அன்புச்செழியன் அவர்கள்
வாலிப சகோதர சகோதரிகளே, விடிந்தால் முதுமை என்பதை மறவாதே!
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடுகின்றோம்! ஆனால் வறுமை என்கின்ற அரக்கனிடமிருந்து என்று விடுதலை என்கின்ற சுதந்திரத்தை பெறப்போகின்றோம்?
மழைக்காலம் நெருங்கி வருவதால், கும்மிடிபூண்டி பெருவாயல் குட்கிராமத்தில் கணவனை இழந்த இளவிதவை பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நமது இந்திரா அறக்கட்டளை சார்பில் நானும் ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு இரா.அன்புச்செழியன், சித்தார்த், VJ கோபி மற்றும் சமூக சேவகி சகோதரிகள் மோதி மற்றும் லலிதா ஆகியோருடன் நலம் விசாரித்து தார்பாலின், 5 கிலோ அரிசி பைகள், பெண்குழந்தைகளின் படிப்பிற்கான காசோலை, (நோட் புக், பேனா, பென்சில், மற்றும் பல), பெட்ஷீட் மற்றும் புது உடைகளை கொடுத்து விட்டு வேதனையுடன் இல்லம் திருப்பினோம்.
இவர்களின் அன்றாட வேலை பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை சேகரித்து அதனை விற்று தங்கள் வாழ்வை வாழ்கின்றனர்.
ஓலை குடிசை இல்லாமல் என்று நம் தேசம் மாறுகின்றதோ அன்றுதான் நமக்கு முழு சுதந்திரம்.
இளைஞனே உன் கால்கள் குடிசையை நோக்கி பயணிக்க மறந்துவிடாதே......
மழை காலம் நெருங்கி வருவதால், கணவனை இழந்த பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வாழும் குடிசை வீட்டை நமது இந்திரா அறக்கட்டளை சார்பில் நானும் ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு இரா.அன்புச்செழியன் மற்றும் சமூக சேவகி சகோதரிகள் மோதி மற்றும் லலிதா ஆகியோருடன் பார்வையிட்டு, அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகள் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு தேவையான உதவிகளை கூடிய விரைவில் செய்து தருவதாக வாக்களித்து ஒரு சில உதவிகளை செய்து வந்தோம்.
இடம்: சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி
10 ஆம் வகுப்பில் 72% மதிப்பெண் பெற்று 11ஆம் வகுப்பு செல்லும் தன் மகளின் கல்வி கட்டணம் செலுத்த இயலாத குடும்பத்தை இந்திரா அறக்கட்டளை கண்டறிந்து, கல்விகட்டணத்தை நாங்கள் செலுத்தியுள்ளோம். குடிகார தந்தை ஒருபோதும் வேலைக்கு செல்வதில்லை. அம்மா கூலி தொழிலாளி, தன்னுடைய குறைந்த தினசரி ஊதியத்திலிருந்து, தற்போதுள்ள கடனுக்கான வட்டியை தினசரி அடிப்படையில்(Daily/Speed வட்டி) செலுத்துகிறார். கல்வி கட்டணம் செலுத்துவது நிரந்தர தீர்வு அல்ல. மதுவுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் திரு. M. K. Stalin மற்றும் திரு. Udhayanidhi Stalin கேட்டுக் கொள்கிறோம். நன்றி அறக்கட்டளை நிர்வாகி ரூபன் உடன் திரு சித்தார்த்தா ஆலோசனை குழு உறுப்பினர் & தன்னார்வலர்.
மாதவிடாய், பெண்னே உன்னை வணங்குகின்றோம்.
சமீபத்தில் திருமணமான பெண், அதிக இரத்தப் போக்கினால் ஹீமோக்ளோபின் அளவு 3.8 ஆக மிக குறைந்து, நிலைகுலைந்தவளுடன் மருத்துவமனை நாடுகின்றனர், அவளுடைய உள்ளுறுப்புகளும் மிகமோசமாக பாதிப்படைந்தது என்கின்ற மருத்துவ அறிக்கை வெளிவருகின்றது. இதனை அந்த ஏழை குடும்பம் எவ்வாறு எதிர்கொள்ளும்?
இத்தகவல் அறிந்த கல்லூரி நண்பர்கள் மற்றும் நமது அறக்கட்டளையும் ஒன்றிணைந்து சுமார் ரூ.33,000 ஆயிரம் சேகரிக்க முடிந்தது, அத்தொகையை அப்பெண்ணின் மருத்துவ செலவிற்காக மருத்துவமனை வங்கி கணக்கில் செலுத்தினோம்.
பெண்ணை நீ இன்றி ஆண்கள் இல்லை
நன்றி: நமது அறக்கட்டளை சட்ட ஆலோசகர் திரு. உமா சங்கர் UmaShankar L R U மற்றும் கல்லூரி நண்பர்கள்
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘புற்றுநோயால் தன் கணவனை இழந்த பெண், இளம் விதவை ஆகிறாள், மறுமணம் செய்து கொள்ளாமல் தான் பெற்ற இரு மகள்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள், சிறியதொரு வாடகை வீட்டில் வசித்து கொண்டு, தனியார் நிறுவனம் வேலை சென்று நாட்களை வேதனையுடன் நகர்த்துகின்றாள். இதுதான் ஏழ்மை மற்றும் கண்ணீரின் பாதை’. இந்திரா அறகட்டளை இவர்களைக் கண்டறிந்து கல்வி உதவித்தொகையை வழங்கினோம் ரூபன் உடன் நமது அறக்கட்டளை ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு அன்புச்செழியன். @anbuchezhiyan.anbuchezhiyan.9404
திருமணத்தை தாண்டிய உறவா?
ஆணின் இச்செயலால் ஒருத்தி வாழ்க்கை படுகின்றாள், மனைவியோ இளமை, மற்றும் ஆசையோடு தன் வாழ்க்கையும் சேர்த்து இழக்கின்றாள்.
பெண் குழந்தை தகப்பன் இல்லாமல் வளர்கிறது, சொந்தங்களும், சமுதாயம் புறக்கணிக்கிறது, மகளுக்காக வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இதுதான் கண்ணீரின் பாதை.
புறக்கணிப்பே, புறக்கணிப்பின் வலியை உணரும் இந்நிலையில் அப்பெண்ணின் பெண் குழந்தைக்கு நமது அறக்கட்டளை சார்பில் முழு கல்வி உதவித்தொகையை வழங்கினோம்.
குடி குடியை கெடுக்கின்றது
குடிக்கு அடிமையாகிய கணவனை இழந்த பெண், சாலை சுத்தம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இரு பிள்ளைகளை வளர்க்க போராடுகின்றாள், வாடகை வீடு, கடன், கண்ணீர், வேதனை, இது தான் இறந்தவன் அளித்த பரிசு! இந்நிலையில் நமது அறக்கட்டளை மூலம் அப்பெண்ணின் மகளுக்கு படிப்பிற்கான முழு கட்டண தொகையை வழங்கினோம்.
ஆண் மகனே குடி பழக்கம் இருந்தால் திருமணம் செய்து கொள்ள விரும்பாதே!
தமிழக அரசு சார்பில் காட்டுப்பள்ளி இருளர் இன மக்களுக்காக எடுக்கப்பட்ட முதல் கட்ட நடவடிக்கை.
நமது அறக்கட்டளை மூலம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருளர் இன மக்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட விசேஷித்த முகாமில் நானும், ஆலோசனை குழு உறுப்பினர் திரு.அன்புச்செழியன் அவர்களும் கலந்து கொண்டோம்.
- நன்றி தாசில்தார், VAO, Revenue Inspector, and CM Cell Officers & Co-ordinators.
It's my pleasure to share that we participated as 'Toilet Volunteers' in the Chennai International Toilet Festival - 2022!
Have Mapped 62 toilets for 'kakoos App', and received the certificates.
Thanks to Udhayanidhi Stalin Black Sheep Hello FM Cheer Toilet Tales കക്കൂസ് കഥകൾ Greater Chennai Corporation IHE Delft Institute for Water Education Torque Entertainment DotProduct Solutions LLP PVR CINEMAS Maatram Foundation
Proud to share that we served as a 'Toilet Volunteer' in a Chennai International Mapathon-Toilet Festival-2022, Day-1.
Thanks to @chennaicorp IHE Delft Institute for Water Education Torque Entertainment DotProduct Solutions LLP PVR CINEMAS Black Sheep @hellofm106.4Hello [email protected]
Udhayanidhi Stalin
சென்னை இன்டர்நேஷனல் மேபத்தான்-டாய்லெட் ஃபெஸ்டிவல்-2022, நாள்-1ல் 'கழிப்பறை தன்னார்வலராய்' நாங்கள் பணியாற்றினோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பும், பெண்களின் கல்வியும் ஒரு தேசத்தை உருவாக்கும். ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பம் முழுவதும் கல்வி கற்றதாக அர்த்தம் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு ‘இளம் வயதில் சென்னை மாநகராட்சியின் மேயர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி பிரியா ராஜன் அவர்களை நமது அறக்கட்டளை சார்பாக சந்தித்து, நமது அறக்கட்டளையின் மூலமாக முன்னெடுக்கப்படும் பணிகளை பற்றி பகிர்ந்து கொண்டேன்’, மேலும் காட்டுப்பள்ளி இருளர் இன மக்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும், அதற்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டேன்! நேரில் சந்திக்க உதவிய நமது அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் ஒவ்வொருத்தருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Proud to share that our Indira Charitable trust is part of the Chennai International Mapathon Program, Toilet Festival 2022!
CMDA உறுப்பினராக தேர்ந்தெடுக்க மாதவரம் MLA திரு. சுதர்சனம் மாதவரம் எஸ் சுதர்சனம், MLA அவர்களுக்கு நமது அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டேன். அவரும், நமது அறக்கட்டளை Indira Charitable Trust பணிகள் சிறக்க வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.
ஏழைகளுக்கு மட்டும் மருத்துவம் எட்டா கனியோ?
இரு பிள்ளைகளுடன் நல்ல நிலை வாழ்ந்த குடும்பம், கணவன் மரித்துவிட பெண் நிலைகுலைகின்றாள், போராடி தன் குடும்பத்தை நடத்த முற்படுகின்றாள், இதற்கிடையில் தன் மகன் சிறிது மனநலம் பாதிப்படைய மேலும் வேதனை வாட்டுகின்றனது, இருப்பினும் வேதனையோடு ஓடுகின்றாள் தன் பிள்ளைகள் என்ற சொத்திற்காக.
ஒரு வழியாக தன் மகளின் திருமணம் முடிய, இனி வாழப்போகும் நாட்கள் சிறிது மனநலம் பாதிப்பபடைந்த தன் மகனுக்காக, இதன் மத்தியில் கொரோனா கோரத்தாண்டவம் மிகு வறுமையை காட்டியது. அவள் பெண் தானே விட்டதா விதி? தன் மகன் மேலும் ஒரு சில நோய்க்கு உட்படுகின்றான், அவள் படும் கஷ்டம் கேள்வி பட்ட நாங்கள், மருத்துவமனை சென்று ஒரு சிறிய உதவி செய்து நம்பிக்கை வார்த்தைகளை விதைத்தோம்.
உடன் இந்திரா அறக்கட்டளை தன்னார்வலர் சகோ.ஜோசப். Ruban Ponraj R
என்று நாம் பணத்தின் மீது குடும்ப வாழ்க்கையை கட்ட ஆரம்பித்தோமோ, அன்றே அன்பு என்கின்ற மிக பெரிய தூணை தகர்த்துவிட்டு, விருப்பமில்லா கட்டாய திருமணங்கள், சமுதாயத்திற்கான திருமணங்கள், சாதி அடிப்படை திருமணங்களை நாமே செய்து விவாகரத்து என்கின்ற பயணம் மேற்கொண்டு ஒற்றை பெற்றோர்(Single Parent) என்கின்ற அரக்கனை வளர்த்து கொண்டிருக்கின்றோம்.
ஏமாற்றியவன்/ள் எந்த வித பாதிப்பின்றி தன் இன்ப நாட்களை கழிக்கின்றாள்/ன். ஏமாற்றியவன்/ள் பின் நாட்களில் உணர்ந்து என்ன பயன்? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?
விளைவு நல் வாழ்க்கை வாழ நினைத்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஏமாற்ற பட்ட பிறகு தன் வாழ்க்கையை இழந்து வேதனை, மன அழுத்தம், தகாத உறவு, திருமணம் இல்லா சேர்ந்து வாழும் வாழ்கை(live in relationship), திருமணம்/மறுதிருமணம் செய்ய அச்சம், தூக்கமின்மை, காவல் நிலையம், நீதிக்காக நீதிமன்ற அலைச்சல் பின்பு தற்கொலையை நோக்கிய அல்லது நடமாடும் பிணமாக தன் வாழ்நாட்களை கழிக்கிறான்/ள்.
நன்கு கல்வி பெற்றவனோ/ளோ மற்றும் நன்கு மத வேதங்களை கற்றவனோ/ளோ இதற்கு விதிவிலக்கா என்ன? கிறிஸ்தவத்தில் தான் விவகாரத்தே அதிகமாம்!
ஒருசிலரோ எதிர்நீச்சல் போட்டு, உடைந்த வாழ்க்கையை நல்ல துணை கொண்டு மீண்டும் கட்டுகின்றனர். அவனே/ளே சமுதாயத்திற்கான தூணாக மாறுகிறான்/ள்.
ஆண் மகனே, பணத்தை முன்னிறுத்தி வரதட்சணை திருமணம் செய்துவிடாதே, விருப்பிலா/சமுதாயத்திற்கான/சாதி திருமணத்தை தவறியும் செய்து விடாதே. மனம் பொருந்தி அன்பு என்கின்ற கனி கொண்டு திருமணம் செய்தால் சிறப்பு. விதவை/விவாகரத்து பெற்றவளுக்கு/ஏமாற்ற பட்டவளுக்கு/ உன் வாழ்க்கையை கொடுத்தால் மிக சிறப்பு.
இந்திரா அறக்கட்டளை நாங்களும் இதை போன்று ஒருசில அனுபவங்களை கடந்ததால் ஒற்றை பெற்றோரின்(Single Parent) பெண் குழந்தைகளின் கல்விக்காக துணை நிற்கின்றோம். அன்பை விதைத்து அன்பை பெறுவோம்!
எங்களை ஆதரிப்போரும் இதை போன்று ஒருசில அனுபவங்களை கடந்து வந்தவர்கள். எனவே ஒற்றை பெற்றோரின் பெண் பிள்ளைகளின் பிறந்த நாள் வரும் பொழுது, தவறாமல் தங்கள் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்வார்களோ அதே அன்பே விதைக்கின்றனர்.
ஏழ்மை ஒரு சாபம் என்றாலும், முதுமையை என்ன சொல்லுவது?
கணவன் மற்றும் தன் மகள் மரித்த பிறகு, தன் இரு ஆண் பிள்ளைகளும் கைவிட்ட பிறகு நான் எங்கு செல்லுவேன் என புலம்பிய நிலையில் இரு கண்களும் தெரியாமல் போன பிறகும் தன்னை மாய்த்து கொள்ளாமல் ஒரு சில நட்புகளால் நம்பிக்கையுடன் தன் அன்றாட வாழ்வை நகர்த்தி வரும் இந்த வயதான தாயை என்னவென்று சொல்லுவது? ரூபாய் 2500 வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தாலும், தன் இரு மகன்களையும் விட்டு கொடுக்காமல், நம்பிக்கையை வார்த்தையாக என்னிடம் வடித்த நிமிடங்கள் மிக வேதனையை விதைத்தது.
ஒரு சிறு உதவி செய்து, பின்பு தங்களுடைய அறுவை சிகிச்சைக்காக scan எடுக்க வேண்டிய தொகையை நமது அறக்கட்டளை மூலம் வழங்குவதாக கூறிவிட்டு வந்தேன். நீல நிற சட்டையுடன் இருக்கும் மணி என்னும் ஆட்டோ ஓட்டுநர் தன் தாயை போன்று கவனித்து வருவதால் மனித நேயம் இன்னும் மரிக்கவில்லை என்று உணர்ந்து கொண்டேன். யாரேனும் தாம்பரம் அருகில் இருந்தால் எனக்கு தெரிய படுத்தவும், இந்த பாட்டிக்கு தேவையான முதியோர் பென்ஷன் வாங்கி தர முடியும் என்றால் தயவு கூர்ந்து தெரிய படுத்தவும் நன்றி
Thanks to Trible SSS for your kind support & wishes!
Suresh Sir, Selvam Sir, Senthil Sir.
புதுச்சேரி காலாபேட் MLA கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்து நமது அறக்கட்டளையை அறிமுகப்படுத்தி வாழ்த்துக்களை பகிர்ந்து & பெற்றுக்கொண்டோம்.
மருத்துவம் (MBBS) படித்து முடித்து விட்டு, குடும்ப சூழ்நிலை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கல்லூரியிலிருந்து சான்றிதழ்கள் வாங்க முடியாத சகோதரியை Women Inspector நமது அறக்கட்டளையை அறிமுக படுத்தியதை தொடர்ந்து 50% தொகையை வழங்கினோம். மித தொகையை கூடிய விரைவில் தருவதாக உறுதியளித்தேன்.
மருத்துவர் அவர்களும் இதை நான் கடனாக பெற்று கொள்வதாக கூறி அவர்களை போன்று கஷ்டப்படும் பெண் பிள்ளைகளுக்கு நமது அறக்கட்டளை மூலம் உதவுவதாக கூறினார்.
Poverty is common for everyone! We have to fight!
காட்டுப்பள்ளில் வசிக்கும் பழங்குடி இருளர் மக்களின் அடிப்படை தேவைகளான ஆதார், ரேஷன், வாக்காளர், சாதி சான்றிதழ், இல்லம், தடுப்பூசி, மற்றும் அரசு அறிவிக்கின்ற அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று, பின்பு பொன்னேரி RDO (வருவாய் கோட்டாட்சியர்) & உட்கோட்ட நடுவர் நீதிபதி (Sub Divisional Magistrate) திரு.ப செல்வம் அவர்களை சந்தித்து அம்மக்கள் நிலைமையை பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, இன்று 11-01-2022 காலை 11:30 மணிக்கு வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector) திரு சஞ்சீவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்(VAO) திரு ஜெயபிரகாஷ் அவர்களிடம் பழங்குடி இருளர் இன மக்கள் 31 குடும்பங்களின் விவரங்களை ‘அச்சு நகல்‘ வடிவில் பகிர்ந்துகொண்டதை தொடர்ந்து நடவடிக்கை பணிகளை ஆரம்பித்தனர்.
காட்டுப்பள்ளில் வசிக்கும் பழங்குடி இருளர் மக்களின் அடிப்படை தேவைகளான தடுப்பூசி, இல்லம், ஆதார், ரேஷன், வாக்காளர், சாதி சான்றிதழ் மற்றும் அரசு அறிவிக்கின்ற அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றதை தொடர்ந்து, பொன்னேரி RDO (வருவாய் கோட்டாட்சியர்) & உட்கோட்ட நடுவர் நீதிபதி (Sub Divisional Magistrate) திரு.ப செல்வம் அவர்களை சந்தித்து அம்மக்கள் நிலைமையை பகிர்ந்து கொண்டேன், அவரும் உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதிசெய்தார். உடன் கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவர் திரு.J. மனோகரன்.
இந்திரா அறக்கட்டளை தன்னார்வலரும் நண்பனாகிய அசோக் மாரியப்பன் உதவியால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் Ma Subramanianஅவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, எண்ணூர், அடுத்த காமராஜர் துறைமுகம் அருகாமையிலுல்ல காட்டுப்பள்ளில் வசிக்கும் பழங்குடி இருளர் மக்களின் அடிப்படை தேவைகளான தடுப்பூசி, இல்லம், ஆதார், ரேஷன், வாக்காளர், சாதி சான்றிதழ் மற்றும் அரசு அறிவிக்கின்ற அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை தமிழக முதல்வர் M. K. Stalin கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்கின்ற கோரிக்கை மனுவை அளித்தோம். அமைச்சர் அவர்களும் அன்புடன் ஏற்றுகொண்டு, கோரிக்கை மனுவில் கையொப்பம்மிட்டு மருத்துவ அதிகாரிகளுக்கும் தன் துறை சார்ந்த தக்க நடவடிவக்கை உடனே ஆணையிட்டார்.
Thanks to eNoah iSolution India Pvt Ltd for putting your hands with us for downtrodden people. special thanks to a CSR Team & HR.Mr. Sunil
வட சென்னை எண்ணூர், அடுத்த காமராஜர் துறைமுகம் அருகாமையிலுல்ல காட்டுப்பள்ளில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்கள் சுமார் 100 பேருக்கும் மேல் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஆற்று கழிவு நீரில் மீன், இறால் மற்றும் நண்டு பிடித்து தற்காலிக தார்பாலின் கூடாரம் அமைத்து தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்கள், இவர்களுக்கு அரசு சார்ந்த எந்த ஒருவித அடையாள அட்டைகளான ஆதார், வாக்காளர், ரேஷன் மற்றும் ஜாதி சான்றிதழ் உட்பட்ட எந்த ஒரு சான்றும் கிடையாது என்றும் தெரிவித்து இருந்தார்கள். அடையாள அட்டை இல்லாததால் தேர்தலில் இவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை மற்றும் கொரோனா நோய் தொற்று பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் கிடையாது. கொரோன நிமித்தம் அப்பகுதியில் வசிக்கும் சிறு பிள்ளைகள் இரண்டு ஆண்டு காலமாக பள்ளிக்குச் செல்லவில்லை என்பதால் இவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகதான் இருக்கிறது. இந்நிலையில் இந்திரா அறக்கட்டளை (http://www.indiracharitabletrust.com/) R. ரூபன் பொன்ராஜ் உடன் தகவல் தொழில் நுட்ப கம்பெனி (eNoah iSolution India Pvt Ltd) இ-நோவா ஐசொல்யூஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (https://enoahisolution.com/) இணைந்து சிஎஸ்ஆர் (Corporate Social Responsibility) சேவையாக ஒரு மாதத்திற்கு தேவையான 31 மளிகை பொருட்களுடன் காலணிகளும் ஓவ்வொரு குடும்பத்திற்க்கும் வழங்கபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவர்களின் அடிப்படை தேவைகளான ஆதார்,ரேஷன், வாக்காளர், சாதி சான்றிதழ் மற்றும் கல்வி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா .பு.அன்புச்செழியன் உடன் அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளை ஆர்வலர்கள் உமா சங்கர்,பால் சுரேஷ், சித்தார்த், தளபதிராஜா, விக்னேஷ் போன்றோர் பங்கு பெற்று சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழக முதல்வர் ஐயா தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பழங்குடி இருளர் சமூகமான தங்களுடைய வாழ்வாதாரத்தையும், அத்தியாவசிய தேவைகளையும், குழந்தைகளின் படிப்பையும் பூர்த்தி செய்து உதவுமாறு கண்ணீர் மல்க கேட்டு கொண்டனர்.
There is a small family living in a kasimedu slum(30sqft) with 2 daughters. All of sudden, got to know that her 10th std studying elder daughter got a cancer tumor. In the midst of this tragedy, her mother & grandma without giving up successfully finished the surgery, and the cancer tumor has been removed. Post Surgery, for a sake of further precautions, Dr. asked them to take an MRI scan. As the father is addicted to a drink. Moreover, during a financial crisis, they did not take Scan for the past 5 months. On top of that, they did not send her to school to continue her higher secondary education. This is called 'Poverty'. Since the poor family does not have money Rs.13k so that they could not take scans, she lost her education as well. (MRI Scan Rs-8k & the school fee- 5k). Indira Charitable Trust got to know about this situation, and immediately we issued a cheque for an MRI scan and we promised to help them in terms of continuing her education. We request our Chief Minister to take appropriate action against banning alcohol in TN..
காசிமேடு குடிசைப்பகுதியில் (30 சதுர அடி) 2 மகள்களுடன் ஒரு சிறிய குடும்பம் வசித்து வருகிறது. திடீரென்று, 10 ஆம் வகுப்பு படிக்கும் மூத்த மகளுக்கு புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இந்த சோகத்திற்கு மத்தியில், அவரது தாயும் பாட்டியும் மனம் தளராமல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர், புற்றுநோய் கட்டியும் அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக, டாக்டர் அவர்களை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கச் சொல்லி இருந்தார். தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதால். மேலும், நிதி நெருக்கடியின் போது, கடந்த 5 மாதங்களாக ஸ்கேன் எடுக்கவில்லை. அதற்கு மேல், மேல்நிலைக் கல்வியைத் தொடர அவளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதன் பெயர் தான் வறுமை. ஏழைக் குடும்பத்திடம் ரூ.13 ஆயிரம் பணம் இல்லாததால், ஸ்கேன் எடுக்க முடியாமல், படிப்பையும் தொடர முடியாமல் இழந்தார். (எம்ஆர்ஐ ஸ்கேன் ரூ-8 ஆயிரம் & பள்ளி கட்டணம்- 5 ஆயிரம்). இந்திரா அறக்கட்டளைக்கு இந்த நிலைமை பற்றித் தெரிய வந்தது, உடனடியாக நாங்கள் எம்ஆர்ஐ ஸ்கேன்க்கான காசோலையை வழங்கினோம், மேலும் அவரது கல்வியைத் தொடர உதவுவதாக உறுதியளித்தோம். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் M. K. Stalin ஐயா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு சில குடிசைகள் தீக்கிரையாகின, ஒரு சில குடிசைகள் மழைக்கு இரையாகின - இது தான் ஏழ்மை. மாத சம்பளம் பெரும் ஒருசில அண்ணன்மார்கள் நமது அறக்கட்டளையுடன் இணைந்து தார்பாலின், 5 கிலோ அரிசி பைகள், பாய், போர்வை, பிஸ்கட் மற்றும் ஒருசிறிய தொகை வழங்கினோம். இடம் : Stanley Hospital Backside, Old Washermenpet
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்திற்கு எத்தனையோ முயற்சிகளை முன்னெடுத்து அம்மக்களின் ஒருவராகவே தன்னை இணைத்து தன்னலம் மறந்து வாழ்ந்து வரும் சமூக ஆர்வலர் & VCK மாவட்ட செயலாளர் தோழர்/அண்ணண் திரு. அன்புச்செழியன் உடன் கடந்த ஆறுமாதங்களா இருளர் இன மக்களின் கல்விக்காக நாம் உழைக்க வேண்டும் என்று பலமுறை நாங்கள் உரையாடினது உண்டு. இக்கனமழையின் மத்தியில் நேற்று எண்ணூர் அடுத்து உள்ள காட்டுப்பள்ளியை இன்று அதிகாலை இவர்களை நாங்கள் இருவரும் சந்தித்து அவர்கள் படும் மிகடுமையான இன்னல்களை கேட்டு எங்கள் மனம் நொறுங்கியது. இம்மக்களின் தீவு உலகம் தார்பாய் கூடாரத்தை காண மிக ஆபத்தான தெர்மாகோல்(படகு) பயணங்களை நாங்கள் மேற்கொள்ளும்போது நடுவில் அத்தெர்மக்கோல் கவிழ்ந்து சேற்றில் சிக்காமல் உயிர் பிழைத்தோம். தோழரின் அலைபேசி செயல் அற்று போனது. நண்டு, இறால் மற்றும் ஒரு சில உயிரினங்களை பிடித்து தங்களின் உணவாக உண்டு வாழ்ந்து வரும் அம்மக்களுக்கு ஓர் இரு நாட்களுக்குள் அரிசி, தார்பாய், போர்வை மற்றும் ஒரு சிறிய கட்டுமரம் வழங்குவதாக உறுதியளித்துளோம்.
இந்திரா அறக்கட்டளை மற்றும் என்னுடைய கல்லுரி நண்பர்களும் இணைந்து மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மிக ஏழ்மை குடும்பங்களை சந்தித்து 5 கிலோ அரிசி 85 குடும்பங்களுக்கும், பெட்ஷீட் 40 நபருக்கும், பிஸ்கட் 70 நபருக்கும், மற்றும் பிரட் 70 நபருக்கும் வழங்கினோம். என் கல்லுரி நண்பர்களுக்கு மிக்க நன்றி, மேலும் எனது நண்பரின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வை துவங்கி வைக்க வருகை தந்த முன்னாள் அமைச்சர் திரு D. ஜெயக்குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி.
Together with the Indira Charitable Trust and my college friends, we met the poorest families affected by the rains & floods and distributed 5 kg of rice to 85 families, bedsheets to 40 Persons, biscuits to 72 persons, and bread to 70 persons. Many thanks to my college friends and also to Mr. D. Jayakumar, the former Minister who accepted my friend's invitation and came to inaugurate the event.
கல்வியால் வறுமையை ஓழிக்கவும். கணவனை இழந்து மன உளைச்சலில் இருந்து மீள முடியாமல், 2 குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கும் ஒரு பெண்மணி, கல்விக் கட்டணத்தைச் செலுத்த உதவுமாறு நமது இந்திரா அறக்கட்டளையிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது நிலைமையை ஆராய ஆரம்பித்தபோது, அவளுடைய மகள் 3வது & 4வது வகுப்பிற்கானக்கான கட்டணம் செலுத்தாததால் கடந்த 18 மாதங்களாக பள்ளிக்குச் செல்லவில்லை என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தை நேரில் சந்தித்து அவர்களது தற்போதைய நிலைமையை விளக்கி, பெரும் தொகையை கட்டணத்தை குறைக்குமாறு கேட்டுகொண்டோம். பள்ளியின் முதல்வர் எங்கள் கோரிக்கையை ஏற்று சற்று தொகையை குறைத்துள்ளார். இதற்கிடையில், நிலுவையில் உள்ள கட்டணத்தை தவணை முறையில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டனர். உதவி ஆணையர் திரு.முகமது நாசர் அவர்களின் கையால் முதல் தவணைத் தொகை மாணவருக்கு வழங்கப்பட்டது. ஏசி சார் மிகவும் பணிவானவர், எக்காரணம் கொண்டு பெண்கள் கல்வியை நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார். உயர் பதவியில் இருப்பவர்கள் எப்போதும் கல்வியை ஆதரிக்க விரும்புகிறார்கள். நன்றி ஏசி சார். எங்கள் நன்கொடையாளர்களுக்கு சிறப்பு நன்றி, நாங்கள் இதுவரை யாரிடமும் நன்கொடை கேட்டதில்லை, எதிர்காலத்திலும் நாங்கள் யாரிடமும் நன்கொடை கேட்க மாட்டோம். எங்கள் சேவையின் அடிப்படையில், தொண்டு எண்ணங்களைக் கொண்டவர்கள் நன்கொடையாளருகளாக தானாக முன் வருகிறார்கள். நாங்கள் அவர்களுடன் கைகோர்த்து, தேவைப்படும் மக்களுக்கு வழங்கப்படுவதை 100% உறுதி செய்கிறோம்.
குடி எத்தனயோ குடும்பங்களை வறுமைக்குள்ளாக்கியுள்ளது, இன்னும் எத்தனை குடும்பங்களை அழிக்கபோகின்றதோ?
குடிகார தந்தை ஒருபோதும் வேலைக்கு செல்வதில்லை. அம்மா ஒரு தினசரி ஊதியர், தன்னுடைய குறைந்த தினசரி ஊதியத்திலிருந்து, தற்போதுள்ள கடனுக்கான வட்டியை தினசரி அடிப்படையில் செலுத்துகிறார்.
இந்திரா தொண்டு நிறுவனத்திலிருந்து, அவரது மகளின் 10 ஆம் வகுப்பு பள்ளி கட்டணத்தை நாங்கள் செலுத்தியுள்ளோம்.
இந்த சூழ்நிலையில், கல்வி கட்டணம் செலுத்துவது நிரந்தர தீர்வு அல்ல. மதுவுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் திரு. M. K. Stalin மற்றும் திரு. Udhayanidhi Stalin கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
Drinking has impoverished so many families, how many more are going to be destroyed?
The drunken father never goes to work. The mother is a daily wage earner who pays interest on the existing loan on a daily basis from her minimum daily wage.
From Indira Charitable Trust, we have paid her daughter's 10th standard school fees.
Paying an educational fee is not a permanent solution for this scenario. We request Tamil Nadu Chief Minister Mr. Stalin, and Mr. Udayanithi Stalin to take the appropriate steps against Alcohol. Thanks
Kill Poverty!
Right from T.H. Road to Ernavoor could see a minimum of 30 to 50 people who live at the roadside, some have a mental problem, a few of them were abandoned by family and due to poverty lives at the roadside. From a charitable trust, giving a portion of food is not at all a solution. Notwithstanding, we have to identify the root cause. Love everyone without any limitation so that we could avoid this in the future.
We request Mr. M. K. Stalin Chief Minister of Tamil Nadu & Udhayanidhi Stalin to take appropriate action against this scenario.
வறுமையை ஒழிப்போம்!
டி.எச் சாலையில் இருந்து எர்னாவூர் வரை குறைந்தது 30 முதல் 50 பேர் சாலையோரத்தில் வசிக்கிறார்கள், சிலருக்கு மன பிரச்சனை இருக்கிறது, அவர்களில் சிலர் குடும்பத்தால் கைவிடப்பட்டனர் மற்றும் வறுமை காரணமாக சாலையோரத்தில் வாழ்கின்றனர். ஒரு தொண்டு அறக்கட்டளையிலிருந்து, உணவின் ஒரு பகுதியை வழங்குவது ஒரு தீர்வாகாது. ஆயினும்கூட, மூல காரணத்தை நாம் அடையாளம் காண வேண்டும்.
எதிர்காலத்தில் இதைத் தவிர்ப்பதற்காக அனைவரையும் எந்த வரம்புமின்றி நேசிக்கவும்.
இந்த நிலைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் திரு. எம்.கே. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறோம்.
Had spent some valuable time with RK Nagar MLA Mr. JJ Ebenezer JJ Ebenezer
From 'Indira Charitable Trust', I have given some requests about 'RK Nagar Development'. Very humbly he got the requests and confirmed with me to sort out the issues as soon as possible. Also, he shared some wonderful info about the forthcoming development plan for RK Nagar. Wish him great success in taking all the steps.
Let us have faith with the wait!
ஆர்.கே.நகர் எம்எல்ஏ திரு. ஜேஜே எபினேசருடன் சில மதிப்புமிக்க நேரத்தை செலவிட்டேன்.
இந்திரா தொண்டு நிறுவனத்தில் இருந்து, 'ஆர்.கே.நகர் வளர்ச்சி' பற்றி சில கோரிக்கைகளை அளித்துள்ளேன். மிகவும் தாழ்மையுடன் அவர் கோரிக்கைகளைப் பெற்று, விரைவில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்னுடன் உறுதி செய்தார். மேலும், ஆர்.கே.நகருக்கான வரவிருக்கும் வளர்ச்சித் திட்டம் பற்றிய சில அற்புதமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.
காத்திருப்பதில் நம்பிக்கை கொள்வோம்!
தன் கணவர் இறந்து சுமார் 6 வருடங்கள் கடந்தாலும், இரு கால்களும் ஊனமுடைய பெண் தன் இரு பெண்பிள்ளைகள் எவ்வாறாவது படித்து விட வேண்டும் என போராடுகின்றாள்.
தினமும் சுமார் 35 கிலோமீட்டர் பயணித்து தன் பெண் பிள்ளைகளுக்காக வேலை செய்து படிக்க வைக்கின்றாள். பெண் பிள்ளைகளும் தன் தாய்க்கு உதவ இக்கடினமான சூழ்நிலையில், கல்லுரி மற்றும் பள்ளி முடிந்து மாலை நேரம் சிறிய வேலை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் கொடிய கொரோனா நிமித்தம் அனைவரும் வேலை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு மிக கஷ்டப்படும் நிலைக்கு உள்ளாகின்றனர்.
சுமார் 80 வயது மதிக்க தக்க முதியவர் தன் மகள் மற்றும் இரு பேர பெண்பிள்ளைகள் படும் கஷ்டத்திற்கு உதவு வேண்டும் என அந்த வயது முதிர்ந்த பெரியவர் சாலை ஓரங்களில் காய்கறி விற்கின்றார்.
இந்நிலையில் இவர்கள் நம்முடைய தொண்டு நிறுவனத்தை நாடினர், நாங்களும் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை அதாவது 12 வது படிக்கும் பெண் பிள்ளைக்கு முழு கட்டணத்தை வழங்கி, நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்தோம்.
பெண்களின் வாழ்க்கை மிகுந்த போரட்டம் நிறைந்ததாகவே இருக்கின்றது, மிகுந்த வேதனை நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும் அதில் சிலர் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகின்றனர். IAS/IPS படிக்கவேண்டும் என்ற கனவுகளோடு மாணவி தன்னுடைய இளங்கலை படிப்பை 85% மதிப்பெண்களோடு தொடருகின்றாள், ஆனால் ஒருசில சம்பவங்கள் அவளை வேதனை என்ற பாதைக்குள் நடத்தி அவளை இன்னும் வலிமை மிக்கவளாக மாற்றுகின்றது. பிரிந்து சென்ற தகப்பனிடம் இருந்து படிப்பிற்கு ஒரு உதவியும் இல்லை, தகப்பனும் தன்னுடைய ஆட்டோவிற்கு கடன் தொகை கட்ட இயலாமல் மிகவும் சிரம படுகின்றான், இதினிமித்தம் தன்னுடைய ஆட்டோ ஓட்டும் தொழிலை இழக்கிறான். கொடிய கொரோனா தன்னுடைய தாய் செய்யும் சிறிய தொழிலையும் அழிக்கின்றது, தன்னுடைய அண்ணன் ஒரு மாற்று திறனாளி. இத்தனை பிரச்சனைகள் மத்தியில் தான் இருந்த வாடகை வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி. இநெருக்கடி மத்தியில் நம்முடைய தொண்டு நிறுவனத்தை நாடுகின்றாள், நாங்களோ அவளுடைய கனவை ஒருபோதும் களைத்து விடக்கூடாது என்ற தன்னம்பிகை நிறைந்த விதைகளை விதைத்து மேலும் அவளுடைய கடைசி ஆண்டு கல்லுரி கட்டணத்தை செலுத்தி, IAS/IPS கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறினோம். நன்கொடையாளர்களில் ஒருவருக்கு எங்கள் பணிவான நன்றிகள். நாம் ஒவ்வொருவரும் உதவி என்ற விதையை விதைத்தால் மட்டுமே வறுமை இல்லா இந்தியாவை உருவாக்க முடியும்.
தன் தகப்பன் பிரிந்து சென்று பல வருடங்கள் கடந்தாலும், தன் தாய் எப்பாடு பட்டாவது தன் மகளுக்கு கல்வியை கொடுத்து விட போராடுகின்றாள், அதுவே உயர்வுக்கும் வழிவகுக்கின்றது. எங்களோடு இணைந்து 'வறுமை ஒழிப்போம்' என்ற தரிசனத்தை நிறைவேற்ற பங்களித்த நன்கொடையாளர் குடும்பத்திற்கு மிக்க நன்றி.
On Balas birthday his friend Raji has donated food packets to the needy. We wish him a happy birthday and have a great year ahead.
இரண்டு குழந்தைகளுடன் ஒரு சிறிய குடும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தது. திடீரென்று, தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கணவர் இல்லாமல், தனது 30 வயதில் ஒரு இளம் விதவை தனது அன்றாட உயிர்வாழ்வே ஆழ்ந்த சிந்தனைக்குள்ளானது, மேலும் தன் பிள்ளைகளின் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை.
இந்திரா தொண்டு அறக்கட்டளையில் நாங்கள் குழந்தையின் கல்வியை ஆதரிப்பதில் எங்கள் கையை வழங்கியுள்ளோம், அதற்கான தொகை அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள், உங்கள் ஆரோக்கியத்தை அறியப்படாத நோய்களிலிருந்து காப்பாற்றுங்கள்.
வீட்டில் ஒரு குடும்பம் உங்களுக்காக காத்திருக்கிறது.
A small family with two kids lived a happy life.
All of sudden, father got a heart attack and passed away.
Without a husband, a young widow in her 30s is pondering her daily survival and unable to pay their tuition fees.
We at Indira charitable trust have lent a hand in supporting the kid's education and the amount for the same has been handed over to her son.
what do we learn from this incident?
Physical health is very important, stop eating junk foods save your health from unknown diseases.
You have a family waiting at home
சென்னை சேத்துப்பட்டில் மகளிர் குழுவினர் சுமார் 60 சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின சிறப்பு கூட்டத்தில் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த தருணங்களை பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இக்குழுவை எங்களால் மறக்க இயலாது, ஏன் என்றால் கொரனா காலத்தில் மிகவும் கஷடப்படும் குடிசை வாழ் குடும்பங்களை கண்டறிந்து திரு. இரா.சகாயநாதன் பொது செயலாளர், உதவும் உள்ளம் சமூக நல சங்கம் மூலமாக இந்திரா தொண்டு நிறுவனமும் இணைந்து 5 கிலோ அரிசி பைகளை சுமார் 50 குடும்பங்களுக்கும் மேல் வழங்கினோம். இனிய பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்!
For a charitable purpose Inspector of police has donated 35 books to the needy. Proud to share that we were part of it. Reading a book is fine. But, keep it in your mind, When someone comes up with a query we should in a position to give a clarification. So read with full concentration.
தொண்டு நோக்கத்திற்காக காவல்துறை ஆய்வாளர் 35 புத்தகங்களை தேவைப்படுபவர்களுக்கு வழங்கியுள்ளார். நாம் அதன் ஒரு பகுதியாக இருந்ததைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க பெருமிதம் கொள்கிறோம்.
புத்தகம் படித்தல் என்பது நல்லதொன்று. ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், யாராவது கேள்விகளுடன் வரும்போது நாம் தெளிவுபடுத்தும் நிலையில் இருக்க வேண்டும்.
We have identified one more family, helped them in terms of paying this academic year 9th std fee.
They could not pay their school kid's fees.
Father is a drunken man & never goes to a job. Mom is a daily wage, from the less daily wages, paying interest for the existing credit on a daily basis.
From the above incident, what do we learn?
STOP DRINKING!
நாங்கள் இன்னும் ஒரு குடும்பத்தை அடையாளம் கண்டுள்ளோம், இந்த கல்வியாண்டின் 9 ஆம் வகுப்பு கட்டணத்தை செலுத்துவதில் அவர்களுக்கு உதவினோம்.
அவர்களுடைய பள்ளி குழந்தையின் கட்டணத்தை அவர்களால் செலுத்த முடியவில்லை.
தந்தை ஒரு குடிகாரர் & ஒருபோதும் ஒரு வேலைக்கு செல்வதில்லை. அம்மா ஒரு தினசரி ஊதியம், குறைந்த தினசரி ஊதியத்திலிருந்து, தற்போதுள்ள கடனுக்கான வட்டியை தினசரி அடிப்படையில் செலுத்துகிறார்.
மேற்கண்ட சம்பவத்திலிருந்து, நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
குடிப்பதை நிறுத்து!
மழையின் நடுவில், ஒட்டேரி குடிசை வாழ் 55 குடும்பங்களை அடையாளம் காண சிறிது நேரம் கிடைத்தது.
தேவையான நடவடிக்கைகளை எடுத்த பிறகு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி பைகள் விநியோகிக்கப்பட்டன.
ALC (2016-19) மற்றும்
மக்கள் நண்பர்கள் (போலீஸ்) க்கு நன்றி.
In mid of the rain, got some time to identify 55 families at the Otteri slum.
After taking the necessary steps,
distributed 5 kg of rice bags to each & every family.
Thanks to ALC(2016-19) & Friends of People(police)
Of course, we would like to honor Dr.Prateep V. Philip IPS his words. As per his wish, today we have donated 300 food pockets to the needy.
Thanks to Lions Clubs International. Thanks to Friends of Police Global TN Co-Ordinator Mr.Sagayam & All the 10 volunteers.
ஏழை அந்தஸ்து ஒரு சாபமல்ல என்றாலும்,
குடிசைவாழ் மக்களின் வாழ்க்கையையும் பார்க்கும்போது, நம் இதயங்கள் உடைந்து விடும்.
மழைக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட சில குடிசை பகுதியை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், நாங்கள் இந்திரா அறக்கட்டளை மற்றும் ALC பேட்ச்மேட் (2016-19) உடன் இணைந்து பாதிக்கப்பட்டோரின் ஒரு முறை உணவு மற்றும் மெழுகுவர்த்தி பாக்கெட்டுகளை ஆதரிப்பதில் எங்கள் கையை வழங்கினோம்.
இடம் - பெரம்பூர் ராஜீவகாந்தி சாலை
Though a poor status is not a curse,
When we see slum and their lives, our hearts will be broken.
Post rain, we have identified a few affected slum area, We at Indira charitable trust & ALC Batchmate (2016-19) lent our hand in supporting their one-time food and candle pockets.
Place - Perambur Rajivgandhi Salai
வாழ்க்கை பொதுவானது என்றாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியாக இல்லை.
வேதனையான வாழ்க்கை சம்பவங்களுடன் எங்களுக்கு இரண்டு கல்வி உதவித்தொகை கோரிக்கைகள் கிடைத்தன.
கோரிக்கை -1
அவள் V th std படித்து வருகிறார், அவரது தந்தை தனது மனைவி மற்றும் மகளை கைவிட்டார்.
கோரிக்கை - 2
அவள் கல்லூரியில் படிக்கிறாள், அவளுடைய தந்தை & சகோதரர் காலமானார்கள்.
இரண்டு தாய்மார்களும் தங்கள் குழந்தைகளின் கல்வியை கைவிடவில்லை. அவர்களுக்கு கணவன் இல்லை என்றாலும், அவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு தினசரி கூலிக்கு செல்கிறார்கள்.
எப்போதும், தாய்மை குழந்தைகள் மீது நிபந்தனையற்ற அன்புடன் வாழ்கிறது.
அவர்களின் கல்வியை ஆதரிப்பதில் நாங்கள் ஒரு கை கொடுத்திருக்கிறோம்.
Though life is common, not at all same for everyone. We got a couple of scholarship requests with painful life incidents.
Request -1 : She is studying V th std, her father forsaken his wife & daughter.
Request - 2 : She is studying in college, her father & brother passed away.
Both mothers did not give up their children's education. Though they do not have a husband, they are going for a daily wage to run their day to day life.
Always, motherhood lives with lots of unconditional love for kids.
We have lent a hand in supporting their education.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகும், பலர் தினசரி பிழைப்புக்காக போராடுகிறார்கள். நாங்கள் ஒரு சிலரை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவளித்துள்ளோம்.
Even after the relaxation of curfew, many people are struggling for daily survival. We have identified a few and supported them
இரண்டு குழந்தைகளுடன் ஒரு சிறிய குடும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தது. தந்தைக்கு சொந்தமாக ஆட்டோ ரிக்ஷாவும், தாய் ஒரு இல்லத்தரசியாக இருந்தார். அவர்களுக்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்தனர்.
தந்தைக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அவர்களின் உலகம் முழுவதும் தலைகீழாக சென்றது. ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், அவர்களால் பயணம் செய்யவோ அல்லது சிகிச்சையளிக்கவோ முடியவில்லை, 3 மாதங்கள் புற்றுநோயுடன் போராடி தந்தை காலமானார்.
6 மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த அவரது மனைவிக்கு இது பலத்த அடியாகும். கணவன் மற்றும் தந்தை இல்லாமல், தனது 30 வயதில் ஒரு இளம் விதவை தனது அன்றாட உயிர்வாழ்வைப் பற்றி யோசித்து வருகிறார், மேலும் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
நாம் இங்கே என்ன கற்றுக்கொள்கிறோம்?
இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை உங்கள் மகிழ்ச்சி அல்லது துக்கம் மற்றும் வாழ்க்கை அனைவருக்கும் பொதுவானது அல்லது ஒரே மாதிரியாக இல்லை.
இந்த நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், வெவ்வேறு வியாதிகள், மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றி சிந்தித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவிக் கரம் கொடுங்கள்.
புகைபிடித்தல் மற்றும் குடிப்பதைத் தவிர்க்கவும்
இந்திரா தொண்டு அறக்கட்டளையில் நாங்கள் குழந்தையின் கல்வியை ஆதரிப்பதில் எங்களுடைய கரங்களை வழங்கியுள்ளோம், கல்விக்கான தொகையை உதவி போலீஸ் கமிஷனர் டி. சஹாதேவன் ஐயா மற்றும் முன்னணி சமூக ஆர்வலர் சகோதரர் சாகயம் ஆகியோரின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
A small family with two kids lived a happy life. Father had his own auto-rickshaw and mother a homemaker. They had a son studying 9th and a daughter 7th std.
Their whole world went upside down when the father was diagnosed with lung cancer. With the lockdown in effect, they could not travel or afford treatment and father passed away after battling cancer for 3 months.
This was a heavy blow to his wife who lost her father 6 months back. Without a husband and father, a young widow in her 30s is pondering her daily survival and unable to provide tuition fees.
What do we learn here?
Nothing is permanent in this world even your happiness or sorrow and life is not common or same for everyone.
If you are happy at the moment do think about people who are suffering from different ailments, stress, depression, etc. and lend a helping hand to uplift their lives.
AVOID SMOKING & DRINKING
we at Indira charitable trust have lent a hand in supporting the kid's education and the amount for the same has been handed over to the mother in the presence of Assitant Commissioner of Police D. Sahadevan sir along with leading social activist Bro. Sagayam.
Hi Friends,
One of our Diploma classmate, Hema Kumar, had met with an accident in 2015 and was heavily injured on his back & legs. Following this, a major backbone surgery took place in the same year at Govt. Stanely Hospital Chennai.
Owing to this accident/surgery, he has lost his strength and also the corporate life with good compensation. At present, he could not walk and unable to sit properly.
For daily survival, he is availing the government’s permanent handicap pension to the amount Rs.1000 PM. Due to the current curfew due to the corona pandemic, his mother lost her housemaid job.
Currently, he is in need of one more surgery and has requested Rs.75K to our Indira Charitable Trust http://www.indiracharitabletrust.com
I have informed this situation to all our fellow diploma classmates. After hearing this news, each and everyone started donating.
After this overwhelming response from our friends, we managed to collect Rs.1,22,500.00 (One Lakh Twenty-Two Thousand Five Hundred)
The collected amount has been handed over to him/his mother in the presence of DGP Prateep V. Philip IPS - Head of CBCID along with a leading social activist Bro. Sagayam.
What do we learn from this? I wanted to convey is
Always wear a seat belt/helmet. You have a family waiting at home
Never drink & drive
Avoid rash driving
Once again humanity proved that Unity is a strength & remember Life is short. Let us lend our hand to someone who is needy.
Thanks
வணக்கம் நண்பர்களே,
எங்கள் டிப்ளோமா வகுப்புத் தோழர்களில் ஒருவரான ஹேமா குமார் 2015 இல் ஒரு விபத்தை சந்தித்தார் மற்றும் அவரது முதுகு மற்றும் கால்களில் பலத்த காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ஒரு பெரிய முதுகெலும்பு அறுவை சிகிச்சை அரசாங்க ஸ்டான்லி மருத்துவமனை சென்னையில் நடந்தது.
இந்த விபத்து / அறுவைசிகிச்சை காரணமாக, அவர் தனது பலத்தையும், பெருநிறுவன வாழ்க்கையையும் நல்ல சம்பளத்தையும் இழந்துவிட்டார். தற்போது, அவரால் நடக்க முடியவில்லை, சரியாக உட்கார முடியவில்லை.
தினசரி பிழைப்புக்காக, அவர் அரசாங்கத்தின் நிரந்தர ஊனமுற்ற ஓய்வூதியத்தை ரூ .1000 க்கு பெறுகிறார். கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்போதைய ஊரடங்கு உத்தரவு காரணமாக, அவரது தாயார் தனது வீட்டு வேலை இழந்தார்.
தற்போது, அவருக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, எங்கள் இந்திரா அறக்கட்டளைக்கு ரூ .75 கோரியுள்ளார் http://www.indiracharitabletrust.com
இந்த சூழ்நிலையை எங்கள் சக டிப்ளோமா வகுப்பு தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்தேன். இந்தச் செய்தியைக் கேட்டதும், ஒவ்வொருவரும் நன்கொடை வழங்கத் தொடங்கினர்.
எங்கள் நண்பர்களிடமிருந்து இந்த மகத்தான பதிலுக்குப் பிறகு, நாங்கள் ரூ .1,22,500.00 (ஒரு லட்சம் இருபத்தி இரண்டாயிரத்து ஐந்து நூறு) வசூலிக்க முடிந்தது.
சேகரிக்கப்பட்ட தொகை டிஜிபி பிரதீப் வி. பிலிப் ஐபிஎஸ் - சிபிசிஐடியின் தலைவர் மற்றும் ஒரு முன்னணி சமூக ஆர்வலர் சகோ. சாகயம். முன்னிலையில் அவருக்கு / அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நான் தெரிவிக்க விரும்பினது என்னவென்றால்
எப்போதும் சீட் பெல்ட் / ஹெல்மெட் அணியுங்கள். உங்கள் வீட்டில் ஒரு குடும்பம் காத்திருக்கிறது.
ஒருபோதும் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.
வேகமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
ஒற்றுமை ஒரு வலிமை என்பதை மீண்டும் மனிதநேயம் நிரூபித்தது & வாழ்க்கை குறுகியது என்பதை நினைவில் கொள்க. தேவைப்படுபவருக்கு நம் கையை கொடுப்போம்.
நன்றி
In the Remembering of Honorable APJ Abdul Kalam on his 5th death anniversary. We have distributed 10kg rice packages to very poor families. Our special thanks to our representative & a leading social activist Mr. Sagayam.
Right from Tondiarpet Apollo hospital to Mint Street & Elephant Gateway within 6 KM's, we could see a minimum of 30 to 50 people living on the roadsides without a home, food and clothes. Instead of that, we can say that they are 'Abandoned people'. One time giving the food from the trust is not a big deal. But we have to think that where the problem is? whether the government should take the proper action on this or else the family is doing the mistake? Anyhow, build our family with love and care. Never waste your food & clothes.